பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pseudomonas

909

psoriasis


உள்வரியின் வழக்கமான மாற்றங்கள் இல்லாமல் வெளியாகும் கர்ப்பப்பை இரத்தப் போக்கு.

pseudomonas : போலி பாக்டீரியா : ஒரு பாக்டீரியா இனம். இது கிராம்சாயம் எடுக்காத சாயத் தாவரப் பொருள்.

pseudomucin : போலிப்பிசின் : சில சூல் சுரப்பி நீர்க் கட்டிகளில் காணப்படும் பிசின் அல்லாத ஊன் பசைப் பொருள்.

pseudoparalysis : போலி வாத நோய் : நரம்பு மண்டல நைவு காரணமாக ஏற்படாத ஒரு வகைத் தசை ஆற்றல் குறைபாடு.

pseudoplegia : போலி நரம்பு வாதம் : உடல் நரம்புக் கோளாறு போன்று தோற்றமளிக்கும் வாத நோய், ஆனால் இது இசிவு நோயினால் உண்டாவதாகும்.

pseudopolyposis : போலிப் பெருங்குடல் தொங்கு தசை : விரிவாகப் பரவியுள்ள மலக் குடல் வீக்கத்தினால் இது பெரும்பாலும் உண்டாகிறது.

pseudopuberty : பொய்பூப்பு : லெய்டிக் செல்கட்டியால் ஆண் குழந்தைகளில், ஆணுறுப்பு பெரிதாக வளர்ந்து, பூப்புமயிர் வளர்ந்த நிலை.

psittacosis : பறவை நோய்; கிளி நோய்; கிளிப்பிணி : கிளிகள், புறாக்கள் போன்ற பறவைகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் சீதசன்னி (சளிக் காய்ச்சல்) என்னும் நிமோனியா நோய்.

psoas : இடுப்புத் தசை.

psora : சிரங்கு.

psoralen : சோரலென் : இயற்கையாகக் கிடைக்கும் ஒர் ஒளி உணர்வுக் கூட்டுப் பொருள் இது புறவூதாக் கதிர்வீச்சுக்கு உட்படும்போது தோலில் கருநிறமிகளை அதிகரிக்கிறது. வெள்ளைத் தோல் நோய்க்குப் பயன்படுத்தப்படுகிறது.

psoriasis : சாம்பல்படை; நமட்டுச் சொறி; யானைச் சொறி; தடிப்புத் தோலழற்சி : மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில், குறிப்பாக முழங்கால் மூட்டு, முழங்கைப் பகுதிகளில் ஏற்படும். இஃது மன அழுத்த உளைச்சலினால் மிகைப்படக்கூடும்.