பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pudendal block

914

pulmonary artery


pudendal block : மறையுருப்பு உணர்ச்சி நீக்கம் : பாலினப் புற உறுப்பு போன்ற மறையுறுப்பினை உறுப்பெல்லை உணர்ச்சியகற்றும் மருந்து கொடுத்து உணர்விழக்கச் செய்தல் ஆயுதத்தால் குழந்தையை எடுக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது.

pudendum : புற உறுப்பு; பெண்பால் வெளியுறுப்பு : இனப் பெருக்கத்திற்கான பாலினப் புற உறுப்பு முக்கியமாகப் பெண்களுடையது.

pudenz-Hayer valve : கபால தடுக்கிதழ் : நீர் கொண்ட கபாலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்படும் ஒரு வழித் தடுக்கிதழ்.

puerile breathing : முணுமுணுச் சுவாசம் : முணுமுணு என்ற ஒலியுடன் குழந்தைபோல சுவாசிக்கும் கோளாறு.

puerperal : மகப்பேறு சார்ந்த : பிள்ளைப்பேறு சார்ந்த.

puerperal fever : பேறுகாலக் காய்ச்சல்.

puerperal insanity : பேறுகாலகப் பைத்தியம் : மகப்பேறு கால (பிரசவம்) பைத்தியம்.

puerperat sepsis : மகப்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் : மகப்பேற்றுக்குப் பின் உண்டாகும் சீழ்க்காய்ச்சல்.

puerperium : மகப்பேற்றுப் பின் காலம்; மகப்பேற்றுக் களைப்புக் காலம் : மகப்பேற்றுக்குப் பின்பு வயிறு உட்சுருள்தல் முடிவடைகிற 6-8 வார காலம்.

puff : திடீர் வேக மூச்சு (உள்ளிழுத்தல்) : உலர்பொடி உள்ளிழுப்பான்கள், அளவிட்டு உள்ளிழுப்பான்களை செயல் படுத்தி, திடீரென்று வேகமாக முச்சிழுத்து மருந்தேற்றல்.

puffy tumour : மெத்தென்றகட்டி : எலும்புமச்சை அழற்சியால் பாதிக்கப்பட்ட நெற்றியெலும்பின் மேலுள்ள ஒரு அமுங்கக்கூடிய வீக்கம்.

pulmoaortic : நுரையீரல் பெருந்தமனிசார் : 1. நுரையீரல்கள், பெருந்தமனி சார்ந்த. 2 நுரையீரல் தமனி பெருந்தமனி சார்ந்த.

pulmoflator : நுரையீரல் விரிவாக்கி : நுரையீரலை உப்பச் செய்யும் கருவி.

pulmonary : நுரையீரல் சார்ந்த; நுரையீரல் வழி : நுரையீரல்கள் தொடர்பான நுரையீரல்களில் உள்ள நுரையீரல்களை உடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட நுரையீரல்களில் வலிமை இழந்த.

pulmonary artery : நுரையீரல் தமனி : இதயத்திலிருந்து நுரை யீரல்களுக்குக் குருதி கொண்டு செல்கிற முதன்மைக் குருதிநாளம்.