பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pulmonary infection

915

puker


pulmonary infection : நுரையீரல் நலிவு.

pulmonary oedema : நுரையீரல் நீர்க்கோவை; நுரையீரல் வீக்கம் : நுரையீரலில் உண்டாகும் நீர்த் தேக்கம்.

pulmonary sac : நுரையீரல்பை.

pulmonary tuberculosis : நுரையீரல் கபம்.

pulmonary vein : நுரையீரல் சிரை.

pulmonic : ஈளை மருந்து : நுரையீரல் நோய்க்குரிய மருந்து.

pulmotor : மூச்சூட்டக் கருவி : காற்று அல்லது ஆக்சிஜனை நுரையீரல்களுக்குள் செலுத்தி செயற்கை மூச்சூட்டத்தை தூண்டும் கருவி.

pulp : தசைக்கூழ்; பற்கூழ்; கூழ்; பசை : பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள்.

pulsatile : துடிப்பு சார்ந்த; துடிக்கும் : நாடித் துடிப்பு இயல்பு வாய்ந்த.

pulsation : நாடித்துடிப்பு; துடிப்பு உள்ள : ஒழுங்காக இயங்கும் இதயத் துடிப்பு.

pulse : நாடி/நாடித் துடிப்பு; துடித்தல் : இதயத்தின் இடது கீழறை சுருங்குவதால் தமனிகளுக்குக் கடத்தப்படும் துடிப்பு: குருதிக் குழாய். அதிர்வு, மணிக் கட்டில் கை வைத்து இந்தத் துடிப்பை அறியலாம்.

pulseless disease : நாடியின்மை நோய் : கழுத்திலும், புயங்களிலும் நாடித் துடிப்பு இல்லாமலிருந்து தமனிகள் படிப்படியாக நலிவடையும் நோய்.

pulsimeter : நாடிமானி : நாடி ஆற்றலை அல்லது நாடித் துடிப்பு வீதத்தை அளவிட்டுக் காட்டும் கருவி.

pulsus alternans : ஏற்ற இறக்க நாடித் துடிப்பு : நாடித் துடிப்புகள் வலுவின்றியும், வலுவாகவும் மாறிமாறி ஏற்படுதல். இது இதயத்தின் இடது மேலறை நோயினால் உண்டாகிறது.

pulsus bigeminus : இரட்டை நாடித் துடிப்பு : சில நோய் நிலைகளில் உண்டாகும் இரட்டை நாடித் துடிப்பு அலகு. இது அளவுக்கு அதிகமாக மருந்து கொடுப்பதாலும் உண்டாகிறது.

pultaceous : கூழ் மருந்து : வீக்கத்திற்கான களி போன்ற மருந்து.

pulvis : தூள்; பொடி; சூரணம் மருந்துப்பொடி.

puke : வாந்தி.

puker : வாந்தி மருந்து.