பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pyeloplasty

918

pylorus


பரவும் ஒருவகைச் சிறுநீரக நோய்.

pyelopiasty : சிறுநீரக குழி ஒட்டுறுப்பு அறுவை : சிறுநீரகக் குழியில் செய்யப்படும் ஒட்டு உறுப்பு அறுவை.

pyelostomy : சிறுநீரக குழித் திறப்பு : சிறுநீரகக் குழிக்குள் திறப்பு ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

Pygnalionism : பிக்மேலியானியம் : கிரேக்கச் சிற்பி பிக்மேலியான், தான் வடித்த சிலை உருவையே காதலித்தது போன்று, தான் உருவாக்கிய ஒன்றின் மேலேயே காதல் கொள்ளும் கோளாறு நிலை.

Pyknic : தடித்த உடல் : சிறிய உருண்ட உறுப்புகள், முழுமுகம், குட்டைக் கழுத்து, தடித்து குண்டு உடல்போல் உள்ள உடலமைப்பு.

pyknolepsy : குழந்தைக் காக்காய் வலிப்பு : குழந்தைகளிடம் அடிக்கடி ஏற்படும் இலேசான வகைக் காக்காய் வலிப்பு. இது ஒரு நாளில் நூறு முறைக்கு மேலும் உண்டாகும். பெரும் இசிவின்மை.

pylephlebitis : கல்லீரல் சிரை அழற்சி : கல்லீரல் மண்டலச் சிரைகளில் ஏற்படும் வீக்கம்.

pylethrombosis : கல்லீரல் சிரைக் குருதிக்கட்டு : கல்லீரல் மண்டலச் சிரைகளில் அல்லது அதன் கிளைகளில் ஏற்படும் உள்தசைக் குருதிக்கட்டு.

pyloric stenosis : இரைப்பைக் காப்பு வாயில் சுருக்கம்.

pyloroduodenol : இரைப்பைச் சிறுகுடல் சார்ந்த : இரைப்பைக் காப்பு வாயில் சுருங்கு தசை மற்றும் முன் சிறுகுடல் தொடர்பான.

pyloromyotomy : இரைப்பைக் காப்புத் தசை அறுவை : இரைப்பைக் காப்பு வாயில் சுருங்கு தசையை வெட்டியெடுத்தல்.

pyloroplasty : இரைப்பு வாயில் காப்புத் தசை அறுவை : இரைப்பை வாயில் காப்புத் தசையில் செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம். வழியை அகலப் படுத்துவதற்காக இது செய்யப் படுகிறது.

pylorospasm : இரைப்பைக் காப்பு வாயில் இசிவு : இரைப்பைக் காப்பு வாயிலில் ஏற்படும் இசிப்பு. இது பெரும்பாலும் முன் சிறுகுடல் சீழ்ப்புண் காரணமாக உண்டாகிறது.

pylorus : இரைப்பைக் காப்பு வாயில்; சிறுகுடல் வாய் : இரைப்பையிலிருந்து முன் சிறு