பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/920

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

руocolpos

pyrazinamide




குடலுக்குச் செல்லும் இடை வழிவாய்.

pyocolpos : யோனிக்குழாய்ச் சீழ்.

pyoderma : தோல்சீழ்நோய்.

pyrodermia, pyoderma : தோல் இழைம அழற்சி : புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தில் ஏற்படும் கடுமையான அழற்சி நோய்.

pyogenesis : சீழ்க்கட்டுதல் : சீழ் உருவாதல்.

pyogenic : சீழ் சார்ந்த : சீழ்க் கட்டுதல் தொடர்பான.

pyolabyrinthitis : சீழ்ச் செவிவினை : செவிவளை அழற்சியில் சீழ் வைத்த நிலை.

pyometra : கருப்பைச் சீழ் : கருப்பையில் தங்கியிருக்கும் சீழ் இது நோய் காரணமாகக் கருப்பைக் கழுத்து வழியாக வெளியேற முடியாமல் தேங்கி இருக்கும்.

pyonephritis : சிறுநீரக சீழ்அழற்சி.

pyonephrosis : சிறுநீரகக் குழிச் சீழ் விரிவு : சிறுநீரகக் குழிச் சீழ் நிறைந்து விரிவடைதல்.

pyorrhoea : சீழ்ப் பல்நோய்; பல் வேர் சீழ் ஒழுக்கு; சீழ்வாய் : பல் நோய் காரணமாகப் பல்லிருந்து சீழ் வடிதல்.

pyosalpinx : கருக்குழாய்ச் சீழ்; சீழ் அண்டக் குழல் : அண்டத்தி லிருந்து கருப்பைக்கு வரும் குழாயில் சீழ் கட்டியிருத்தல்.

pyothorax : மார்பு வரிக்குழிச் சீழ்; சீழ் மார்பகம் : மார்பு வரிக் குழியில் சீழ்க்கட்டியிருத்தல், நெஞ்சச் சீழ்.

pyrazinamide : பைராசினாமைடு : காசநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் விலையுயர்ந்த மருந்து இது வாய்வழி கொடுக்கப் படுகிறது. இது கல்லீரலில் நச்சுத்தன்மை உண்டாக்கக் கூடியது. எனவே கவனமாக பரிசோதனைக்குப் பிறகே இது கொடுக்கப்படுகிறது.