பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/924

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quadrate

923

quartan malaria


ஏதுவான இரத்த சேமிப்பு பிளாஸ்டிக் பை, வெளிப்பைகள் மூன்று கொண்டது. கிருமி புகா வகையில் 500 மி.லி. முழு இரத்தத்தை சேமித்து அதை நான்கு 1. பகுதிகளாகப் பிரித்துவைக்க உதவுகிறது.

quadrate : நகோண எலும்பு:

quadriceps : நான்கு தலைத் தசைகள் : தொடையிலுள்ள நீட்டத் தசையின் நான்கு தலைத்தசைகள். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.

quadrigeminal; quarigeminal : நாள் முகைகள் : நரம்பணுக்கள் குவியப் பெற்ற நடு மூளையின் நான்கு மேடுகள்.

quadrigeminal pulse : நாற்றுடி நாடி : நான்கு துடிப்பும் ஒரு இடை வெளியும் உள்ள நாடி வகை.

quadripara (quartipara) : நான்காம் கருத்தரிப்பு : நாலுபெற்ற பெண் நான்குமுறை கருத்தரித்து நாலு உயிருள்ள குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்.

quadruped : நாற்கால் விலங்கு : நான்கு கால்களையுடைய விலங்கு கைகளையும் கால்களையும் தரையில் ஊன்றிய நிலை.

quadruple vaccine : நாற்கூட்டு; மடங்கு அம்மைப்பால் : தொண்டை அடைப்பான், கக்குவான், இளம்பிள்ளை வாதம், வில்வாத சன்னி ஆகிய நோய்களுக்கு எதிராக நோய்த் தடுப்பு செய்வதற்கான அம்மைப் பால் மருந்து.

qualitative : பண்பு சார்ந்த; பண்புத்திறன் : பண்பு அடிப்படை யிலான பண்பு தொடர்பான.

quality : தரம் : பண்பு.

quantimeter : அளவுமானி : ஒருவருக்கு எந்த அளவு எக்ஸ் கதிர்களின் தாக்கம் உள்ளது என்று கணிக்கும் கருவி

quantitative : அளவு சார்ந்த; அளவுத் திறன் : அளவுக்குரிய, அளவு தொடர்புடைய.

quantity : அளவு :

Quarantine : தொற்றுத் தடைக் காப்பு; ஒதுக்குக் கண்காணிப்பு : அடைமனை நோயாளியை தனிமைப்படுத்தல் பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக் காப்புக்காக தனிமையில் வைக்கும் கால அளவு.

quarantine international : பேரடைமனை : பன்னாட்டு அடைமனை.

quartan : நான்கு நாள் முறைக் காய்ச்சல் : நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு நோய்.

quartan malaria : நான்கு நாள் முறைக் காய்ச்சல் : நான்காம்