பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/927

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



R

rabid : நாய் வெறி சார்ந்த : நாய் வெறி நோய் பீடித்த நீர் வெறுப்பு நோய் கண்டுள்ள, வெறி கொண்ட.

rabies : வெறி நாய்க்கடி நோய் : நாய், பூனை, நரி, குருதி உறிஞ்சும் வெளவால் போன்ற பிராணிகள் வெறி கொண்டு கடிப்பதால் மனிதருக்குப் பரவும் ஒரு கிருமியினால் உண்டாகும் நீர் வெறுப்பு நோய் இது உலகெங்கும் ஏற்படும் நோய். இதைக் குணப்படுத்த தடுப்பூசி மருந்துகள் உள்ளன. நோய்க்கிருமி தொற்றியபின் நோய் வெளிப்படுமுன் எதிர்ப் பொருள் நீர்மம் கொடுக்கப் படும்.

race : இனம்.

rachialgai : முதுகெலும்பு வலி.

rachiodymia : முதுகுத் தண்டுவலி.

rachis (rhachis) : இறகு நடு நரம்பு (முருந்து); முதுகெலும்புத் தண்டு; முதுகந்தண்டு துணர் நடுக்காம்பு.

rachitic : மெலிவெலும்பு

rachitis (rickets) : குழந்தை கணை : எலும்புருக்கி நோய் எலும்பு நலிவு நோய் வைட்ட மின் குறைவு நோய்.

radial : ஆரை நாடி; ஆரை : ஆரை நரம்பு; முன்கை ஆரை எலும்புக்குரிய.

radiation therapy : கதிவீச்சு மருத்துவம்.

radical : மூலஉறுப்பு (மூலவேர்); முழுமையான : சேர்மத்தின் அடிப்படைக்கூறாக அமைந்து, சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம். ஒர் உறுப்பின் மூலவேர் சிலசமயம், ஒர் உறுப்பில் கண்ட நோய் உடல் முழுவதும் பரவாமல் இருக்க அறுவை மருத்துவம் மூலம் அந்த உறுப்பின் மூல வேர் அகற்றப்படுகிறது.

radicle : நரம்பு வேர்; சிறு குருதிக் : குழாய் நரம்பின் அல்லது நாளத் தின் வேர் போன்ற உட்பிரிவு.

radiectomy : பல்வேர் நீக்கல்.

radicular : வேருக்குரிய : பல் நரம்பு போன்றவற்றின் வேர் சார்ந்த.