பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radioisotope

928

radish bacillus


radioisotope : கதிரியக்க ஓரகத் தனிமம் : ஒரே அணு எண்ணுடன் வெவ்வேறு பொருண்மை எண்கள் (எடை) கொண்ட ஒரு தனிமத்தின் வடிவங்கள் கதிரியக்க ஒரகத் தனிம நுண்ணாய்வு மூலம் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் கதிரியக்க ஓரகத் தனிமம் உள்ளதா என்பதையும், அதன் அளவையம் கண்டறியலாம்.

radiologist : ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவர்; கதிரியலார் : ஊடு கதிர் (எக்ஸ்-ரே) மற்றும் அது போன்ற உருக்காட்சி உத்திகளைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் மருத்துவ வல்லுநர்.

radiology : ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்; கதிர் வீச்சியில்; கதிரியல் : ஊடுகதிர்களையும், அது போன்ற உருக்காட்சி உத்திகளையும் பயன்படுத்தி நோய்க்குறிகளைக் கண்டறிதல்.

radiopaque : ஊடுகதிர் ஊடுருவாத : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்ப்படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

radiophobica : ஊடுகதிர் தூக்கம்.

rsdioscopy : ஊடுகதிர் ஆய்வு.

radiosensitive : ஊடுகதிர் உணர்வுடைய : ஊடுகதிர்களினால் (எக்ஸ்-ரே) பாதிக்கப்படக் கூடிய, ஊடுகதிர்ச் சிகிச்சையினால் குணமாகக்கூடிய கட்டிகள்.

radiotherapy : ஊடுகதிர் மருத்துவம்; கதிரியக்க மருத்துவம் : நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு கோபால்ட் மூலத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ முறை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அணுக்கதிர் வீச்சுக்கு உட்படுத்துவது.

radiotherapist : ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவர் : புற்றுநோய் போன்ற நோய்களை ஊடுகதிர் மற்றும் பிற கதிரியக்க வடிவங்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் மருத்துவ வல்லுநர்.

radiotherapeutics (radiotherapy) : ஊடுகதிர் மருத்துவம் : ஊடுகதிர்க் கதிரியக்க மருத்தவ முறை.

radish bacillus : ரேடிஷ் பேசில்லஸ் : மண் மற்றும் காய்கறிகளி லிருந்து பெறப்படும் மைக்கோ பேக்டீரியம் டெட்ரே எனும்