பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

radium

929

random controlled trial


வகையினதான நோயுண்டாக்காத கோல்வடிவ நுண்ணுயிர்.

radium : ரேடியம் (கதிரியம்) : இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கதிரியக்க உலோகத் தனிமம்; தார்வண்டல் திரள்களிலிருந்து கிடைக்கிறது. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவத்தில் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.

radium therapy : ரேடியம் சிகிச்சை; கதிரிய மருத்துவம் : ரேடியத்தை (கதிரம்) அல்லது அதன் விளை பொருட்களைப் பயன்படுத்தி நோய் தீர்க்கும் முறை.

radius : முன்கை வெளி எலும்பு; ஆர எலும்பு : முன்கை வட்டச் சீர் எலும்பு; முன்கை ஆரை எலும்பு.

radon : ரேடியம் வாயு (கதிரம்) : கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வாயு வடிவக் கதிரியக்கத் தனிமம்.

radon seeds : ரேடியம் வாயு மாத்திரை : 'ராடோன்' என்ற கதிரியக்க ரேடியம் வாயு (கதிரம்) அடங்கிய மருந்து மாத்திரைப் பொதியுறை, ரேடி யம் அணுக்களைச் சிதைத்து இந்த வாயு உண்டாக்கப்படுகிறது. இது ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறையில் பயன் படுத்தப்படுகிறது.

ragged red fibre disease : கிழிபட்ட செவ்விழை நோய் : கிழிபட்ட உட்குழிவறை கொண்ட இழைகளுடைய இயக்குதசையணுவின் வெளிப்பகுதியில் பெருமளவு உயிரணுக்கள் அழிந்துள்ள இழையன் தசை நோய்.

ralatex test : கீல்வாயு மூட்டு வீக்கச் சோதனை : இரத்தத்தில் கீல்வாயுக் காரணிகள் இருக்கின்றவா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை. இச்சோதனையிலிருந்து கீல் வாயு மூட்டு வீக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியலாம்.

rale : நுரையீரல் துடிப்பு; குழல் ஒலி : நுரையீரலில் உண்டாகும் நோய் காரணமாக ஏற்படும் நாடித் துடிப்பு.

Ramsay Hunt's Syndrome : காது மடல் அக்கி : மடலில் கடுமையான அக்கி நோய், அத்துடன் முகவாதமும் சுவையுணர்வின் மையும் சேர்ந்திருக்கும்.

random controlled trial : தொடர்பற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை : ஒரு புதிய சிகிச்சை முறையை சோதனைக்குட் படுத்தும் திட்டம். இதில் தொடர்பற்ற முறையில் சோதனைக்குட் படுத்தப்படுவர்களுக்கு புது மருத்துவமும், மற்ற கட்டுப்