பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ranitidine

930

rational


பாட்டுக் குழுவுக்கு மருந்தல்லா பொருளும் கொடுக்கப்படும்.

ranitidine : ரேனிட்டிடின் : இரைப்பை மிகு சுரப்புநிலைகளுக்கும் வயிற்றுப் புண்ணுக்கும் சிகிச்சையளிக்கத் தரப்படும் ஹிஸ்டமின் எச்2 ஏற்பியெதிர் மருந்து.

ranke complex : ரேன்க்கே தொகுப்பு : நடுமார்புப் பகுதியை வடிக்கும் அல்லது நுழை வாய், நிணக்கணுக்கள் பரவலாக கண்ணக (கால்சிய) மயமாதலும் உறுப்புள் பொருள் சுண்ணகமயமாதலும் உள்ள நிலை.

ranula : அடிநாக்குக் கட்டி; நாவடி வீக்கம் : நாக்கின் அடியில், நாள அடைப்பு காரணமாக உண்டாகும் நீர்க்கட்டி.

Ranvier's nodes : ரேன்வியர் கணுக்கள் : ஒரு நரம்பிழையின் மெயின் பொருளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சுருக்கங்கள். இதை விவரித்தவர் ஃபிரெஞ்சு நோய்க்குறியியலாள ரான லூயி ரேன்வியர் ஆவார்.

rap : வன்பாலுறவு; கற்பழித்தல்.

raphe : நாக்கு மடிப்பு; ஒட்டல் : நாக்கில் பின்பரப்பிலுள்ள ஒரு தையல் விளிம்பு பொருத்து வாய் கூடல் வாய், மடிப்பு வாய், நடு மடிப்பு.

raretaction : எலும்பு நொய்மை; மென்மையாக்கம் : எலும்பு செறி வின்றி நொய்மையாக இருத்தல் எலும்பு அடர்த்திக் குறைதல்.

ras genes : ரேஸ் மரபணுக்கள் : எலித் தசைநார்ப் புற்றில் முதலில் கண்டறியப்பட்ட, ஆன் கோபுரோட்டீன்கள் அல்லது புரோட்டோஆன்கோ, புரோட்டீன்களை காண்பிக்கும் ஆன் கோஜீன்கள் மற்றும் புரோட்டோ ஆன்கோஜீன்களின் குழு வகை.

raspberry tongue : ரேஸ்ப்பெர்ரி நாக்கு : செம்புள்ளி நச்சுக் காய்ச்சலில் காணப்படும் வீங்கிய வெண்சிம்புகளுடன் சிவந்து பளபளக்கும் நாக்கு.

raspberry tumour : ரேஸ்ப்பெர்ரி கட்டி : தொட்டால் ரத்தம் கசியக் கூடிய காம்புடன்கூடிய ரேஸ்ப்பெர்ரி பழம் போன்ற கட்டி விடெல்லோ-குடல் நாளத்தின் மூடாத இறுதிப் பகுதியின் சீதச்சவ்வு துருத்துவதால் குழந்தைகளில் காணப்படும் தொப்புள் சுரப்பிக்கட்டி.

ratbite fever : எலிக்கடிக் காய்ச்சல் : திருகுசுருள் வடிவ நுண்ணு யிரியினால் உண்டாகும் மறுக்களிப்புக் காய்ச்சல்.

rational : அறிவுக்குப் பொருத்தமான : 1. காரண அடிப்படையிலான ஒரு செய்முறை அல்லது வழிமுறை தொடர்பான, 2. இயல்பான நடத்தை அல்லது நியாயவாதம்.