பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rectal bladder

934

rectum


rectal bladder: மலக்குடல்பை : மலக்குடலினுள் சிறுநீர் நாளங் களைப் பொருத்துவதை இது குறிக்கிறது. சிறுநீர்ப்பைகளில் கடுமையான நோய் ஏற்படும் போது பெருங்குடல் இறுதிப் பகுதியில் கீறி செயற்கை நீர்ப்பை உண்டாக்கி நீர் போக்குக்கு வழி செய்யப்படு கிறது.

rectal thermometer : மயக்குடல் வெப்பமானி.

recta; varices : மூல நோய் : மலக்குடலில் ஏற்படும் மூல நோய்.

rectocele : மலக்குடல் நழுவல்; மலக்குடல் பிதுக்கம்; மலக்குடல் சரிவு; மலக்குடல் இறக்கம் : மலங்கழிக்கும் வாய்க்கு வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் வகையில் மலக்குடல் நழுவியிருத்தல்.

rectos igm oidos copy : நேர் வளைகுடல் நோக்கல் : வளை குடல் அகநோக்கியைக் கொண்டு நேர்குடலையும் வளை பெருங்குடலையும் பரிசோதித்தல்.

rectoscope : மலக்குடல் ஆய்வுக் கருவி; மலக்குடல் நோக்கி; மலக் குடல் காட்டி : மலக்குடலைப் பரிசோதனை செய்வதற்கான கருவி.

rectosigmoid : மலக்குடல் சார்ந்த : மலக்குடல் மற்றும் பெருங்குடலின் எஸ் போன்று வளைந்த பகுதி தொடர்பான.

rectosigmoidectomy : மலக்குடல் அறுவை; மலக் குடல் நெளிஎடுப்பு : மலக்குடலையும், பெருங்குடலின் எஸ் போன்று வளைந்த பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

recto urethral fistula : மலக்குடல், சிறுநீர்ப் புற வழிப்புரை.

rectouterine : மலக்குடல்-கருப்பை சார்ந்த : மலக்குடல், கருப்பை ஆகியவை தொடர்பான.

rectovaginal : மலக்குடல்-யோனிக் குழாய் சார்ந்த : மலக்குடல், யோனிக் குழாய் ஆகியவை தொடர்பான.

rectovaginal fistula : மலக்குடல் யோனிக் புழை.

recto vesical : மலக்குடல் சிறு நீர்ப்பை சார்ந்த : மலக்குடல், சிறு நீர்ப்பை தொடர்பான.

recto vesical fistual : மலக்குடல் சிறுநீர்ப்பை புரை.

rectum : மலக்குடல்; குதவாய் : பெருங்குடலின் அடிப்பகுதி. இது எஸ் போன்ற தெளிவுப் பகுதிக்கும், மலக்கழிவு வாய்க் குழாய்க்குமிடையில் அமைந்துள்ளது.