பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

recumbent

935

red diaper...


recumbent : சாய்நிலை : படுத்துக்கொண்டிருக்கும் நிலை; சாய்ந்திருக்கும் நிலை; பரிசோதிப்பதற்காக சாய்ந்திருக்கும் நிலை.

recuperation : குணமாதல்; மீட்சிபெறல் : நோயிலிருந்து மீள்தல்; இழந்த வலிமையை மீளப் பெறுதல்.

recurrent : மீள் நிகழ்வு : 1. ஒரு கால இடைவேளைக்குப்பின் நோய் அல்லது அறிகுறிகள் மீண்டும் தோன்றுதல், 2. தனக்குத் தானே திரும்புதல்.

red blood cell : சிவப்பணு: நுரையீரலிலிருந்து உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை இரத்தத்தின் மூலம் கொண்டு செல்லும் அப்ப உருவான உயிரணுக்கள்.

red blood corpuscles : சிவப்புக் குருதி அணுக்கள்.

red cell fragmentation syndrome : சிவப்பணு கூறுபடும் நோய்த் தொகுதி : இதய வால்வு நோய்கள், செயற்கை வால்வு பொருத்தல், தீவிர இரத்தக் கொதிப்பு அல்லது உறைகட்டி உறைவணுக் குறைசோகையின் போது, இரத்த நாளங்களுக்குள் சிவப்பணுக்கள் கூறுபட்டு அழிவும் இரத்தமழிச்சோகை.

red cell preservative : சிவப்பணுப்பதனப் பொருள் : இரத்த மேற்று நேரம்வரை, குருதி சிவப்பணுக்களின் தொகுதி ஒன்றை சிட்ரேட், ஃபாஸ்ஃ பேட், டெக்ஸ்ட்ரோசும் அடினினும் போன்ற பதனப் பொருட்களைக் கொண்டு திரவ நிலையில் வைத்திருத்தல்.

redcorpuscles : இரத்தச் சிவப்பணுக்கள்.

Red cross international : பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் : எங்கெல்லாம் மனிதர்கள் துன்பப்படுகிறார்களோ அங்கெல்லாம், துயர் நேராமல் காத்து, துயர்துடைக்கவும் பாடுபட்டு மனிதர்களுக்கு மரியாதை யை உறுதி செய்து, உயிரையும் உடல் நலத்தையும் காப்பாற்றும் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனம்.

red degeneration : சிவப்பணு அழிவு : கர்ப்ப காலத்தில் கருப்பை தசைக்கட்டி மற்றும் நார்க்கட்டியில் காணப்படும் திகவழிவு.

red diaper syndrome : சிவப்பு உள்ளாடை நோயியம் : இளம் குழந்தைப் பருவத்தில், ஒரு சிவப்பு நிறமியை உண்டு பண்ணும் செர்ரேசியாமார்