பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reflectors

937

refractory


reflectors : எதிரொலிப்பான்; ஒளிவாங்கி மீளனுப்பும் சாதனம் : தோல் பரப்பிலுள்ள ஒளிக் கதிர்கள் தோலுக்குள் நுழையாமல் வேறு திசைகளில் திருப்பியனுப்பும், பொருள்கள். டைட்டானியம் டையாக் ஸைடு, டேன்னிக் ஆக்ஸைடு மற்றும் கேலமின் ஆகியவை உதாரணங்களாம்.

reflex arc : அனிச்சைச் சுற்று : உணர்வு நரம்பணுவின் ஒரு நரம்பியக்கப் பகுதி, ஒரு உணர்வுத்தூண்டலை தண்டுவடத்துக்கு அனுப்பி, அங்கு அது இயக்க நரம்பணுவுக்குச் சென்று அங்கிருந்து அனிச்சைத் தூண் டல் தொடர்புடைய தசை அல்லது சுரப்பிக்குச் செல்லுதல்.

reflex (reflex action) : அனிச்சை செயல்; இயல்நரம்பியக்கம்; மறி வினை : மனதினால் கருதப்படாமல், புறத்தூண்டுதல் நேரிடும் போது, நரம்புக்கிளர்ச்சிக் கிணங்கத் தன்னியல்பாகத் தூண்டப்படும் உள்ளுறுப்பு இயக்கச் செயல். எ-டு : தும்முதல்; கண்ணிமைத்தல்; இருமுதல்.

refiex emesis : அளிச்சை வாந்தி : தொண்டையின் சீதச் சவ்வை தொடுவதால் தூண்டப்படும் வாந்தி.

reflex hammer : அனிச்சைச் சுத்தியல் : அனிச்சை மறுவினையைக் கண்டறிய தசைகளை அல்லது தசை நாண்களைத் தட்டிப் பார்க்கப் பயன் படும் ரப்பர் தலைப்பகுதி கொண்ட தட்டும் சுத்தி.

reflux : பின்னொழுக்கு; பின் னோட்டம் : பின்னோக்கிய நீரோட்டம்.

refraction : ஒளி விலகல்; ஒளிக்கோட்டம்; கதிர்ச் சிதைவு : ஒளிக் கதிர்கள் மாறுபட்ட அடர்த்தி களையுடைய ஊடகங்கள் வழியே செல்லும்போது கோட்டமடைதல் இயல்பான கண்பார்வையில் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சந்திக்கும் வகையில் கோட்டமடைகின்றன.

refractionist : பார்வைத்திறன் சோதனையாளர் : கண்ஒளிப் பரிசோதகர் கண்களின் பார்வைத் திறனைக் கணித்து பொருத்தமான சரிசெய்யும் ஒளிவில்லையைக் கண்டறிவதற்குப் பயிற்சி பெற்ற ஒருவர்.

refractometer : பார்வைத்திறன் அளவி : கண் ஊடகம் போன்ற ஒளிகடக்கும் பொருள்களில் ஒளிவிலகல் அளவை கணக்கிடும் கருவி.

refractory : படியாமை; முரண்டு பிடித்தல் : மருத்துவத்திற்கு உட்