பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aldactide

93

aleucocytosis


மருந்தினைப் போன்ற பண்புகளை உடையது. ஆனால், சிறிதளவுகளில் உட்கொள்வதால் மட்டுமே இது பயனளிக்கும்.

aldactide : அல்டாக்டைடு : ஸ்பிரோனோலாக்டோன் ஹைட்ரோ ஃபுளுமிதியாசைடு ஆகியவை அடங்கிய மருந்தின் வணிகப் பெயர்.

aldactone A : அல்டாக்டோன் A : ஸ்பிரோனோலாக்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aldehyde : ஆல்டிஹைடு : (எ-டு) அசிட்டால்டிஹைடு, இது ஒரு வேதிப்பொருள் CH=O அமைப்பைக் கொண்டுள்ளது. இதனை சாராயமாகவோ, ஒர் அமிலமாகவோ மாற்றமுடியும்.

aldehyde reductase : ஆல்டிஹைடு ரெடக்டேஸ் : இது ஒரு செயல் குறைக்கும் நொதிப்பி. ஆல்டோஸ்களை குறைத்தால் வினைப் பண்பால் செயல் குறைக்கச் செய்யும்.

aldolase : தசைநொதி.

aldolase test : தசைநொதிச் சோதனை : ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) சோதனை. தசையைப் பாதிக்கும் நோயில், குருதி நிணநீர்ச் செரிமானப் பொருள் அல்டோலாஸ் அதிகமாக இருக்கும்.

aldomet : அல்டோமெட் : 'மெதில் டோப்பா' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aldose : ஆல்டோஸ் : ஆல்டிஹைடு பிரிவைக் கொண்டிருக்கும் ஒரு மோனோசாக்கரைடு.

aldosterone : அல்டோஸ்டெரோன் இயக்கு நீர் : குண்டிக் காய்ச் சுரப்பிப் புறப்பகுதியில் சுரக்கும் நீர். இது சிறுசீரக நுண்குழாய்கள் மீது செயற்படுவதன் மூலம் மின்பகுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப் படுத்துகிறது. இதனால் இது "கனிமச்சுரப்புப் பொருள்' என்று அழைக்கப்படுகிறது. இது பொட்டாசியம் வெளியேறுவதை அதிகரிக்கிறது. சோடியம் குளோரைடைச் சேமித்து வைக்கிறது.

aldosteronism : அல்டோஸ்டெரோன் மிகைப்பு நோய் : அண்ணீரகச் சுரப்பிப்புறப்பகுதியில் ஏற்படும் கட்டிகளினால் உண்டாகும் நிலை. இதில், மின் பகுப்பு நீர்மப்பொருள் சம நிலையின்மை ஏற்பட்டு, முறை நரம்பிசிவு உண்டாகிறது.

aldosteronopenia : ஆல்டோஸ்ட்ரான் இயக்குநீர்.

aldosteronuria : ஆல்டோஸ்ட்ரான் சிறுநீர்.

alethia : மறக்க முடியாமை.

aletocyte : அலையும் அணு.

aleucocytosis : வெள்ளணுக் குறைவு; வெள்ளணு மரிப்பு : இரத்தத்தில் வெள்ளணுக்களின்