பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rehydration

939

relative tachycardia


rehydration : நீர் மருத்துவம் உடல் நீர்வறட்சி நீக்கல்.

reinfection : மீள்தொற்று : முதல்நிலைத் தொற்றிலிருந்து மீண்ட பின்னர் அதே நுண்ணுயிரால் மீண்டும் ஏற்படும் தொற்று.

reintegration : மீள் ஒன்றிணைப்பு : ஒரு மனநிலைக்கோளாறால் ஏற்பட்ட தொந்தரவுகளிலிருந்து மீண்டும் நன்கு ஒழுங்கமைந்து செயல்படுதல்.

reiter's syndrome : மூட்டு வலி (ரெய்ட்டெர் நோய்) : பெண்களுக்கு உண்டாகும் ஒருவகை மூட்டு வலிநோய். இமையிணைப் படல அழற்சி, முத்திரக் குழாய் அழற்சி ஆகியவையும் இதனுடன் சேர்ந்து வருகிறது.

rejection : ஏற்க மறுத்தல்; திசுப் பொருந்தாமை : பொருத்தப்பட்ட திசுக்கள் அழிந்து படுவதற்கான செய்முறை. உடலில் ஒட்டு அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்பட்ட உறுப்பினை உடல் ஏற்க மறுத்து விடுதல். திசுத் தள்ளுதல்.

rejuvenation : இளமையாக்கம் : மீண்டும் இளமையின் வலிவும் பொலிவும் பெறுதல்.

relapsing fever : மீள் காய்ச்சல்; மறுக்களிப்புக் காய்ச்சல் : உண்ணியினால் உண்டாகும் ஒருவகை நோய். ஒரு வாரம் காய்ச்சல் இருந்து, மீண்டும் குணமாவது போல் தோன்றி, மறுபடியும் கடுமையாகக் காய்ச்சல் தோன்றுதல்.

relative bradycardia : ஒப்பிட்டு இதயக்குறை துடிப்பு : இயல்பாக, உடல் வெப்பநிலை அரை டிகிரி குறைந்தால் நாடித்துடிப்பு பத்துகூடும். ஆனால் இந்த நாடி-வெப்ப அளவுத் தொடர்புநிலை இல்லாத டைபாய்டு, மூளையுறை அழற்சி, மூளைச்சீழ்க்கட்டி, டெங்கு காய்ச்சல், கல்லீரல் அழற்சி, தீப்புண் நிலைகளில், உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும் போது, நாடித்துடிப்பு குறைவான அளவில் உள்ளது.

relation : உறவு; திசு உறவு.

relative risk : ஒப்பிட்டு ஆபத்தளவு : ஒரு குறிப்பிட்ட பரம்பரை காரணி அல்லது சூழல் காரணியால் பாதிப்பு உள்ளவர்களிலும் இல்லாதவர்களிலும் ஒரு குறிப்பிட்ட நோய் தோன்றும் எண்ணிக்கை வீதம்.

relative tachycardia : அதிமிகை இதயத்துடிப்பு (கீல்வாதம்) : காய்ச்சல் தொண்டை அடைப்பான் க்ளாஸ்ட்ரிடிய தொற்றுகள் உருக்கி நோய் மற்றும் (தைராய்டு நச்சு நோய்) மற்றும் தைரோடாக்சிகோசிஸ்.