பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/941

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relax

940

rennin


போன்ற நோய்களில் உடல் வெப்பத்தால் ஏற்படுவதைவிட வேகமாக நாடிதுடிப்பது.

relax : தளர்த்துதல்; தளர்வு : தசை நரம்புகளைத் தளர விடுதல்.

relaxant : தசைத் தளர்ப்பு மருந்து; அழுத்தக் குறைப்பி; தளர்த்தி; நெகிழ்த்தி.

relaxation : தசைத் தளர்ப்பீடு; தளர்வுறல்; நெகிழ்வு.

relaxation therapy : தளர்வு மருத்துவம்.

relaxin : ரிலாக்சின் : பெண் கருப்பையில் சுரக்கும் நீர். இது கருப்பைக் கழுத்தினை மென்மையாக்கி தசை நார்களைத் தளர்த்தி குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.

releasing hormone : விடுவிக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) : ஹைப்போதாலமஹறில் தயாரிக்கப்பட்டு, ஒரு இணைக்கும் சிரை வழியாக நேரடியாக பிட்யூட்டரி சுரப்பிக்குள் செலுத்தப்படும் பல பெப்டைடுகளில் ஒன்று.

relieve : நோய் விடுவி; நோய் நீக்கு.

REM : விரைவுக் கண் இயக்கம் : கனவு நிலையில் ஒரு இயக்கம்.

remedy : நோய்நீக்கி; பிணி நீக்கி : நோய் நீக்கிப் பொருள் ஒரு நோயை குணப்படுத்தும் அல்லது அதன் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கும் பொருள்.

remineralisation : மீள்கனிமமாக்கல் : உணவூட்டக் குறைபாடு அல்லது நோயால் இழந்த கனிமங்களை மீன் நிரப்புதல்.

remission : நோய் தணியும் காலம் குறைப்பு; தணிவு : காய்ச்சல் அல்லது வேறு நோய் தணிகிற கால அளவு.

renal : சிறுநீரகம் சார்ந்த; சிறு நீரகம்.

renal artery : சிறுநீரக தமனி.

renal calculi : சிறுநீரககல்.

renal failur : சிறுநீரகச் செயலிழப்பு.

renal functions : சிறுநீரகச் செயற்பாடு.

renin : ரெனின் : சோடியம் இழப்புக்குப் பதிலாகச் சிறு நீரகத்திலிருந்து இரத்தத்திற்குள் செலுத்தப்படும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்).

rennin : ரென்னின் : குழந்தைகளின் இரைப்பை நீரில் காணப்படும் பாலை உறைய வைக்கும் (தயாரிக்கும்) பொருள். இது கேசினோஜனைக் கேசினாக மாற்றுகிறது. இந்தக் கேசின், கால்சியம் அயனிகளுடன் சேர்ந்து கரையாத தயிராக மாற்றப்படுகிறது.