பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/942

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

renogram

941

repression


renogran : சிறுநீரக செயல்பதிவு : வெளிகதிரியக்க கண்டறி பெறி களைக் கொண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிடுதல்.

renovascular hypertension : சார் இரத்த உயரழுத்தம் (RVH) : தமனி இறுக்கம், நார்த்தசை பிறழ்வளர்ச்சி அல்லது குருதி உறை பொருள் காரணமான சிறுநீரகத்தமனியடைப்பால் ஏற்படும் உயர்இரத்த அழுத்தம்.

reovirus : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி : மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி என்று முன்பு அழைக்கப்பட்டது. இது ஆர்.என்.ஏ. கிருமிகள் அடங்கிய தொகுதியில் ஒன்று. இது கடுமையான நோய் எதனையும் உண்டாக்காமல் மூச்சுக் குழாயையும் குடலையும் பாதிக்கிறது.

repetition strain injuries : மறு நிகழ்வுத் திருகுக் காயங்கள் : முகுது வலி, ஒரு கையில் அல்லது இருகைகளிலும் அல்லது கால்களில் வலி ஆகியவை இதில் அடங்கும். பொருத்தமில்லாத அசைவுகள், இயக்க மில்லாத தசை நிலைமை, இடக்கு முடக்காக நின்று கொண்டு வேலை செய்தல் ஆகியவை இதற்குக் காரணம்.

replacement : மாற்றிப் பொருத்தல்; இழப்பீடு செய்தல்: இழக்கப் பட்ட ஒரு பொருள் அல்லது பகுதிக்குப் பதிலாக அதே மாதிரி பொருள் அல்லது அமைப்பை பொருத்தல்.

replication : நேர்படியெடுத்தல் : (பிரதி)யெடுத்தல், இரட்டித்தல் அல்லது மறு உருவாக்கச் செய்முறை. ஒரு மூல டி.என்.ஏ. அமைப்பி லிருந்து, ஒரு வழித்தோன்றல் டி.என்.ஏ. மூலக்கூறை உருவாக்கும் செய்முறை.

repolarization : மறுமுனைமாறல்; மீள் முனைப்படல் : படல அணு அல்லது இழை மீள் முனைப்படும் செயல்முறை.

repositioning : மீளிடம்வைத்தல் : ஒரு உடல் பகுதியை அல்லது உறுப்பை இயல்பான இடத்தில் திரும்ப வைத்தல்.

repression : உணர் வடக்கம்; உணர்ச்சி ஒடுக்கம்; செயல்தடை : இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். அவா, உணர்ச்சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவதாகப் ஃபிராய்டு கருதினார். இவற்றை ஒடுக்குவதால், அவை கனவுகளாகவும் நரம்பு நோய்க் கோளாறுகளாகவும் வெளிப்படுகின்றன.