பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/943

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reproduction

942

residency


reproduction : இனப்பெருக்கம்.

reproducibility : மீள்முடிவு தரும் தன்மை : ஒரு சோதனையை பல சந்தர்ப்பங்களில் திரும்பச் செய்முறைப்படுத்தும்போது ஒரே மாதிரி முடிவை காட்டும் தன்மையளவு.

reproductive history : மகப்பேறு முன் நிகழ்வு : கர்ப்பம், குழந்தைப்பேறு ஆகியவை பற்றிய ஒரு பெண்ணின் மகப்பேறு வரலாறு.

reproductive system : இனப்பெருக்க மண்டலம் : இனப் பெருக்கத்திற்காக அமைந்து உள்ள உறுப்புகளும் திசுக்களும் ஆண்களிடம் விரை,குருதிநாளங்கள், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பி, விந்துப்பைகள், மூத்திர ஒழுக்குக் குழாய், ஆண்குறி, பெண்ணிடம் கருப்பை, கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய்கள், யோனிக்குழாய் கருவாய் (குய்யம்) ஆகியவை இதில் அடங்கும்.

reproductory insanity : பேறுகால மனநோய்.

resection : அறுத்து நீக்குதல்; |வெட்டி அகற்றல்; அரிதல்; வெட்டி ஒட்டல் : அறுவை மருத்துவத்தில் எலும்பு, குருத்தெலும்பு முதலியவற்றை சீவி நறுக்கி எடுத்தல்.

resectional surgery : அகற்றல் முறை அறுவை; வெட்டி ஒட்டல் அறுவை.

resectoscope : சிறுநீர்ப்பை திசு வெட்டு : சிறுநீர்ப்பை, புராஸ்டேட், சிறுநீர்த்தாரையில் உள்ள நோய்ப் பகுதிகளை அறுத்தெடுக்கும் அகநோக்கித் திசு வெட்டி.

resectotome : அறுத்து நீக்குக் கருவி; அரிவெட்டி : அறுத்து நீக்குவதற்குப் பயன்படுத்தப் படும் கருவி.

reserpine : ரிசர்ப்பின் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்தின் போது பயன்படுத்தப்படும் முக்கியக் காரகம். இது மற்ற மருந்துகளோடு கொடுக்கப்படுகிறது. இதனை நீண்ட நாள் பயன்படுத்தினால் கடும் மனச் சேர்வு நோய் உண்டாகும்.

reservoirs of infection : நோய்த் தோற்றப் பகுதிகள் : மனித உடலில் கைகள், முக்கு, தோல், வயிறு ஆகியவை நோய் தோன்றும் பகுதிகளாகும். இவை சில சூழ்நிலைகளில் நோய்தோன்றும் இடங்களாக அமைகின்றன.

residency : உறைவிடப்பயிற்சி : ஒராண்டு உள்ளுறைபணி முடிந்த பிறகு ஒரு மருத்துவக் கல்விமனையில் தொழிற்பயிற்சி பெறும் முறையான மருத்துவப்