பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/944

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

residual

943

respiraton


படிப்புத் திட்டகாலம், மூன்றாண்டு காலப்பயிற்சியாகுமிது.

residual : எஞ்சிய; எச்சப்பொருள்; மீந்த; தேங்கிய; எச்சம் : நுரையீரலில் வல்லந்தமாகக் காற்றை வெளியேற்றிய பிறகு எஞ்சியிருக்கும் காற்று; சிறு நீர்ப்பையில் சிறுநீர் கழித்த பிறகு எஞ்சியிருக்கும் சிறுநீர்.

resins : பிசின்கள்; ஒட்டுப்பசை : நீரில் கரையாத, திடமா, மணி உருவமற்ற கரிய மீச்சேர்மங்கள். இவை இயற்கையாகக் கிடைக்கும்; செயற்கையாகவும் தயாரிக்கலாம்.

resistance : எதிர்ப்பற்றல்; எதிர்ப்பு; தடையாற்றல் : எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஆற்றல், உளவியலில், தன்னுணர்வற்ற எதிர்ப்பிலிருந்து உணர்வு நிலைக்குத் திரும்புவதைத் தடுக்கும் ஆற்றல். மருத்துவத்தில் ஒரு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல்.

resolution : வீக்கம் முறைதல்; ஊமை வீக்க நீக்கம்; வீக்கத் தளர்வு : ஊமை வீக்கம், சீழ் வைக்காமலேயே மறைந்து விடுதல்.

resolutive : தசை கரைப்பான் : தசை கரைப்பு மருந்து. தசை கரைப்பு மேற்பூச்சு மருந்து, தசை கரைக்கும் ஆற்றல் கொண்ட.

resolvent : கரைப்பு மருந்து : கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து கட்டிகளைக் கூறு படுத்திக் கரைக்கும் மருந்து.

resonance : ஒத்த ஒலியெதிர்வு : ஒத்திசைவு நன்கு அதிரும் ஒரு பகுதியைத் தட்டிப்பார்ப்பதால் கிடைக்கும் ஒலி.

resonium : ரெசோனியம் : பொட்டாசியத்தை ஈர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வணிகப் பெயர். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகப் பொட்டாசியம் இருக்கும் போது இது கொடுக்கப்படுகிறது.

resorcinol : ரிசோர்சினால் : தோலில் தேய்க்கும் பூச்சு மருந்து முகப்பருவுக்குக் களிம்பாகவும், தலைப் பொடுகுக்குக் கழுவு நீர்மமாகவும் பயன் படுத்தப்படுகிறது.

resorption : மறுஉறிஞ்சல்; ஈர்த் துக்கரைத்தல்; மீள் உறிஞ்சுகை : மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல்.

respiraton : மூச்சோட்டம்(சுவாசம்); மூச்சு விடுகை; மூச்சு விடல்; மூச்சு : ஒருமுறை காற்றை உள்