பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

restless leg..

945

reticular


restless leg syndrome : ஓயாக் கால்நோய் : கால் ஓயாமல் அசைந்து கொண்டேயிருக்கும் நோய். கால் எப்போது ஊர்ந்து கொண்டிருத்தல், மெல்ல மெல்ல நகர்தல், சொரிந்து கொண்டிருத்தல், குத்துதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

restpain : ஓய்வுவலி : ஒரு உறுப்பின் தீவிரமான குருதிக் குறை நிலையில், ஏற்படும் தீவிரமான, தொடர்ந்த, நிற்காத வலி, இரவிலும் நோயாளியை விழித்திருக்கச் செய்கிறது. இதற்கு உடல் நரம்புகளின் குருதிக் குறை மாற்றங்கள் காரணமாய் இருக்கக்கூடும்.

restraint : தடுப்புக்காப்பு : நடத்தைக் கோளாறு நோயாளிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு.

restrictive disease : குறையளவு நோய்; விரிவுத்தடைநோய் : நுரையீரல்கள் அல்லது மார்புச்சுவர் விரிவதைத்தடுத்து அதனால் நுரையீரல் கொள்ளளவை, விரிதிறனைக் குறைக்கும் ஒரு மூச்சியக்கக் கோளாறு.

resuscitation : உயிப்பித்தல்; மூச்சு முடுக்கல்; இதய இயக்க மீட்பு : இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவிக்கப் படுகிறது. வாயில் வாயை வைத்தும், வாயை மூக்கில் வைத்தும், வாயை மூக்கிலும வாயிலும் வைத்து மூச்சோட்டம் ஏற்படுத்தப் படுகிறது.

retained placanta : நஞ்சுத் தங்கல் : தங்கிப்போன நஞ்சு.

retardata : அறிவுத்திறன் குறைவு.

retardation : வளர்ச்சி குறைபாடு; குறைவளர்வு : ஏற்கெனவே வேகமாக அல்லது அதிவேகமாக நடைபெறும் வளர்ச்சியைத் தாமதமாக்குதல். வள்ர்ச்சியை அல்லது செய்முறையை நிறுத்துதல்.

retarded child : வளர்ச்சிக்குறை குழந்தை : மூளை குறை வளர்ச்சிக் குழந்தை.

retching : குமட்டல்; வாந்தி முயற்சி : வாந்தி எடுப்பதற்காகக் குமட்டுதல்.

retention : கழிவுப்பொருள் தேக்கம்; கழிவுத் தேக்கம் : உடலில் கழிவுப்பொருட்கள் தேங்கியிருத்தல், சிறுநீர் வெளியேறாமல் தேங்கியிருத்தல்.

reticular : வலைச் சவ்வு : வலைப்பின்னல் போன்ற சவ்வு.