பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/947

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reticular formation

946

retina


reticular formation : வலையுரு அமைப்பு : மூச்சு, இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், உணர்வு நிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைத் தண்டுப் பகுதியிலுள்ள, ஒரு சிறு தடித்த நரம்பணுக்குவியல்.

reticulum : இரண்டாம் இரைப்பை : அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை.

reticular pattern : வலையுரு பாங்கு : காற்று நிறைந்த ஈரல் நுண்ணறையைச் சுற்றியுள்ள வளை நீள்திட்டுகள் கொண்ட வலையமைப்பு. எக்ஸ்ரே படத்தில் திட்டுகளை, நுண்ணிய, நடுத்தரம், பருவெட்டான என வகைப்படுத்தலாம்.

reticulin : வலையுருப்புரதம் : வலைத்திசுவமைப்பின் இணைப்புத் திசுவிலுள்ள கரையாப் புரதம்.

reticulocyte : இளம் சிவப்பணுகள் : சுற்றோட்டமாகச் செல்லும் இளம் இரத்தச் சிவப்பணு. உயிரணு எலும்பு மச்சையாக வளரும்போது அதில் இருந்த உட்கருவின் சுவடுகள் இதில் இன்னும் அடங்கியிருக்கும்.

reticulocytopaenia : வலையுருவணுக்குறைக்குருதி : இரத்தத்தில் சுற்றும் வலையுருவணுக்கள் குறைந்த நோய்.

reticulocytosis : வலையுருணு மிகை; முதிரா சிவப்பணுமிகை : இரத்தத்தில் சுழலும் முதிரா சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிகுதல்.

reticuloendothelial system (RES) : குருதியோட்ட மண்டலம் : ஒரே மரபு வழியில் வந்த பரவலாக அமைந்த உயிரணுக்களின் மண்டலம். இது பல முக்கியமான செயல்களைச் செய்கிறது. இது நோய்க்கு எதிராகப் பாது காப்பளிக்கிறது. பித்தநீர் நிறமிகள் உருவாகாமல் தடுக்கிறது; சிதைந்துபோன பொருட்களை அப்புறப்படுத்துகிறது, எலும்பு மச்சை, கல்லீரல், ஈரல்குலை, நிண அணுத்திசு ஆகியவை இவற்றின் மையங்கள்.

reticuloendothelium : ரெட்டிகுலோஎன்டோதீலியம் : வலை உள்வரி மண்டலம் சார் அணுக்களைக் குறிக்கிறது.

reticulum : வலையுரு இழைத்திசு; கட்டிழைமம் : செல் (உயி ரணு)க்களுக்கிடையேயான, ஒரு நுண்ணிய இணைப்புத்திசு விழைகளான வலையமைப்பு.

retina : விழித்திரை : கண் விழியின் பின் புறத்திரை கண் விழி