பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/948

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

retinitis

947

retrieval


யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி.

retinitis : விழித்திரை அழற்சி : கண்விழித்திரையில் உண்டாகும் வீக்கம்.

retinoblastoma : விழித்திரைச் சவ்வுக் கட்டி; விழித்திரை முன் புற்று : விழித்திரையின் நரம்புச் சவ்வில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளுக்கு மட்டுமே உண்டாகிறது. ஊஸ் டிராஸ்-டி என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் இது உண்டாகிறது.

retinography : விழித்திரை ஒளிப்படம்.

retinoid : ரெட்டினாய்டு : முகப் பரு, சொரியாசிஸ் (நமட்டுச் சொறி) போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படும் வைட்டமின்-ஏ போன்ற ஒரு செய்முறை கூட்டுப் பொருள்.

retinopathy : விழித்திரை நோய் : விழித்திரையில் வீக்கம் உண்டா காமல் ஏற்படும் நோய்.

retinoscope : விழித்திரை ஆய்வுக் கருவி; விழித்திரை நோக்கி; விழித்திரை காட்டி : விழித் திரையில் ஒளிவிலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் கருவி.

retinotoxic : விழித்திரை நச்சு : விழித்திரையில் ஏற்படும் நச்சு.

retirement syndrome : ஓய்வு நோயியம் : குறிப்பிட முடியாத தானியங்கி நரம்பு மண்டலக் கோளாறுகள், பலவீனம், ஈடு பாடின்மை ஆகியவை ஏற்படும். ஒய்வுக்குப் பிறகு ஏற்படும். உடனடி அல்லது நாள்பட்ட தக்கமைவின்மை.

retractile : பின்னிழுவை : பின்னுக்கு இழுக்கக்கூடிய, நாக்கை உள்ளே இழுத்துக்கொள்ளுதல்.

retractor : இழுவைக் கருவி : உள் காயங்களைக் பார்க்கும் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அறுவைக் கருவி.

retrieval : மீட்டெடுப்பு : நினைவுப் பெட்டகத்தில் சேர்த்து வைக்கப்