பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/949

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

retrobulbar

948

retroversion


பட்ட செய்திகளை மீண்டும் உணர்வுக்குக்கொண்டு வருதல்.

retrobulbar : பின்கண்விழி : கண்விழியின் பின் பகுதி சார்ந்த கண்விழியின் முன்புறமுள்ள ஒளியியல் நரம்பில் ஏற்படும் வீக்கம்.

retrocaecal : பெருங்குடல் பின்பகுதி : பெருங்குடல் வாய்ப்பின் பகுதி.

retroflexion : பின்விளைவு; பின்மடக்கம்; பின்மடங்கல் : பின்புற மாக வளைந்திருத்தல்.

retrognathia : தாடைப்பின்னைமைவு : ஒன்று அல்லது இரு தாடைகளும் நெற்றித்தள அளவுக்குப் பின்னேறியிருத்தல்.

retroocular : கண் பின்பகுதி.

retrograde : பின்போக்கு : பின்னோக்கிச் செல்லுதல்.

retrolental fibroplasia : ஒளிவில்லைப்பின் நாரிழைப் பொருக்கம் : புத்திளம் சிசுவுக்கு ஆக்சிஜன் செலுத்துவதால் ஏற்படும் வேறுபட்ட அளவு பார்வையிழப்பு.

retroperitoneal : வபையின் பின் பகுதி : வயிற்று உடற்பகுதி சூழ்ந் துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையின் பின்புறப்பகுதி.

retroperitonitis : வயிற்றுள்ளுறைப்பின் அழற்சி : வயிற்றுள்ளு றைப்பின் திசு அழற்சி.

retropharyngeal : பின்தொண்டை : தொண்டையின் பின்பகுதி.

retropharyngeal abcess : பின்தொண்டைச் சீழ்க்கட்டி.

retroplacental : பின் நச்சுக்கொடி : நச்சுக்கொடியின் பின்பகுதி.

retroposition : பின்தள்ளல் : ஒரு அமைப்பு அல்லது உறுப்பு பின்பக்கம் தள்ளப்பட்டிருத்தல்.

retrospection : பின் காட்சி ஆய்வு : முன் நிகழ்ச்சிகளை நினைவு கூர்தல்.

retrospective falsification : முன்நினைவுப் பொய்யாக்கம் : ஒரு உண்மை திரும்ப நினைவுக்கு வரும்போது பொய்யான விவரங்களை நோயாளி சேர்த்துச் சொல்லுதல்.

retrosternal : பின்மார்பெலும்பு : மார்பெலும்புக்குப் பின்புறமுள்ள.

retrotracheal : பின் மூச்சுக்குழல் : மூச்சுக்குழலின் பின்புறமுள்ள.

retroversion : பின் சாய்வு; பின் கவிழ்தல் : கோளாறுடைய கருப்பை இடம்பெயர்ந்து பின்புறம் சாய்தல்.