பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/952

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rheumatologist

951

rhinosporidosis


rheumatologist : முடவியல் மருத்துவர்; கீல்வாத மருத்தவ வல்லுநர் : கீல்வாத நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை தரும் சிறப்பு மருத்தவர்.

rheumatology : கீல்வாதம் நோயியல்; முடவியல்; முடக்கு வாதவியல் வாதவியல்; கீல்வாத : நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

rheums : வாத நோவுகள் : வாதத்தினால் உண்டாகும் வலிகள்.

rheumy : கபமுடைய சளியுடைய.

rhimal : நாசித்துளை சார்ந்த.

Rh immune globulin : ஆர்ஹெச் இம்யூன்குளோபுலின் : குழந்தையின் Rh வகை D ஆன்டிஜென் (விளைவியம்)னுக்கு எதிரான தாயின் காப்பமைப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் புரதச்செறிவு.

rhinitis : மூக்கழற்சி; நாசியழற்சி : மூக்குச் சிலேட்டுமப்படல வீக்கம்.

Rh incompatibility : ஆர்ஹெச் ஒவ்வாமை : மாறுபட்ட ஆன் டிஜென்களைக் கொண்ட இருவகை இரத்த அணுக்களில் ஒரு இரத்த வகையில் Rh காரணி இருந்து மற்றொரு இரத்த வகையில் Rh காரணி இல்லாமல் இருப்பதால் ஒன்றுக்கொன்று ஒவ்வாத நிலை.

rhinology : மூக்கு நோயியம் : மூக்கினைப் பாதிக்கும் நோய்கள் ஆராயும் அறிவியல்.

rhinomycosis : ரைனோமைக்கோசிஸ் : மூக்கு சீதச்சவ்வின் பூஞ்சனத் தொற்று.

rhinopharyngeal : உள் மூக்கு வளை சார்ந்த.

rhinophyma : மூக்குத் தோல் கரணை; மூக்கு முனைக்கட்டி : மூக்கின் தோலில் ஏற்படும் கரணை விரிவகற்சி.

rhinoplasty : மூக்கின் குழைம அறுவை; மூக்கு ஒட்டு அறுவை : முக்கின் கட்டமைப்பில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.

rhinoplastic : மூக்கின் குழைம அறுவை சார்ந்த.

rhinorrhoea : மூக்குக் கசிவு; நாசியொழுக்கு : மூக்குச்சளி கழிதல்.

rhinoscopy : மூக்குச் சோதனை : மூக்கின் உட்பகுதியைக் கருவி மூலம் பரிசோதித்தல்.

rhinosporidosis : மூக்கு போஞ்சணை நோய் : மூக்கு, கண்கள், காதுகள், குரல்வளை, அரிதாகப் பிறப்புறுப்புகள் ஆகிய