பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

algesimeter

95

alimentation


வலியுணர்வு; அபரிமிதமான நரம்புணர்ச்சிக் கோளாறு.

algesimeter : வலியுணர்வுமானி : வலியை உணரும் திறனளவைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி.

algesimetry : வலியுணர்வு அளவி.

algesiogenic : வலியூக்கி.

algesthesia : வலியுணர்தல்.

algicide : பாசிக்கொல்லி : 1. பாசிகளுக்குக் கேடு விளைவிக்கின்ற ஒரு பொருள். 2. பாசிகளைக் கொல்கின்ற ஒரு பொருள்.

algid : குளிர் காய்ச்சல்; குளிருற்ற; சன்னியுற்ற.

algidty : சன்னி; குளிர் : கடுமையான காய்ச்சல், குறிப்பாக முறைக் காய்ச்சல் (மலேரியா) நிலை. இந்நிலையின் போது, குதவழி வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

alginates : அல்ஜினேட்டுகள் : கடற்பாசி வழிப்பொருள்கள். இவற்றை உறுப்பெல்லைக்குட் பட்டுப் பயன்படுத்தும்போது, இரத்தத்தை மூடிக்கொள் கின்றன. அல்ஜினேட்டுகள் கரைசலாகவும், செறிவுறுத்திய மென்வலை யாகவும் கிடைக்கின்றன.

alienist : மனப்பிணி மருத்துவர்; மனநோய் ஆய்வாளர்.

alignment : நேராக்கல்; பொருத்தீடு, அமைவாக்கம்.

aligogenesia : வலியூட்டல்.

aligology : வலிவியல்.

aligomenorrhorea : வலி தரு மாதவிடாய்.

aligophobia : வலியச்சம்.

algorithm : கணக்கு : ஒரு செயலைச் செய்வதற்குரிய படிப்படியான செயல்முறை கட்டளைகள்.

algosia : அதிவலியுணர்வு.

algosis : காளான் தொற்றுநோய்.

alible : ஊட்டச் சத்துணவு.

alices : பெரியம்மை முன் செந்தடிப்பு.

alidine : அலிடின் : 'அனிலரிடின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

alienation : மன முறிவு : உளவியல் முறையிலும், சமூவியல் முறையிலும் மக்களிடமிருந்து மனமுறிவு கொள்ளுதல்.

alienia : மண்ணிரல் இல்லா.

alienism : மனப் பிறழ்வு.

aliment : ஊட்ட உணவு.

alimentary : உணவூட்டம் சார்ந்த; இறை மண்டல; செறிமான உறுப்புகள்.

alimentary canal : உணவு செல் வழி.

alimentation : உணவூட்டம் அளித்தல்; உணவு ஏற்றல் : இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற உணவூட்டமளித்துப் பேணுதல்.