பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/960

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rotation

rounds


களில் இரத்தம் தேங்குவதை சரிசெய்ய, கைகால் உறுப்புகளில் இரத்தம் தங்கச் செய்யும், சுழல்வரிசையில் பயன்படுத்தப்படும், நான்கு அழுத்திக்கட்டும் பொறியமைப்புகளில் ஒன்று.

rotation : சுழற்சி : 1. ஒரு அச்சைச் சுற்றி சுழல்வது. 2. பல வகை மூட்டுகளில் ஏற்படும் நான்கு அடிப்படை இயக்கங்களில் ஒரு வகை.

rotator : சுழல் தசை; சுழற்றி : உறுப்பைச் சுழற்றும் தசைத் தொகுதி.

rotaviruses : இரைப்பை அழற்சி நச்சுயிர் : குழந்தைகளிடமும் பச்சிளங்குழந்தைகளிடமும் ஏற்படும் இரைப்பை அழற்சி நோய் தொடர்புடைய நோய்க் கிருமிகள்.

Roth's spots : விழி வெண்புள்ளி : விழித் திரையில் உண்டாகும் வட்டமான வெண்புள்ளிகள். சில நேர்வுகளில் குலையணைச் சவ்வு வீக்கம் காரணமாக ஏற்படுகிறது. குருதிக்குழாய் அடைப்பினால் இது தோன்று வதாகக் கருதப்படுகிறது.

rotor syndrome : சுழலிநோயியம் : வாழ்நாளைக் குறைக்காத மிதமான நோய்நிலை. பிலிருபின். உள்ளேற்புக் குறைவால், கல்லீரலுக்குள் இணைப்புக்குறைவதனால் ஏற்படும், இணை மிகைபிலிருபின் குருதி நிலை கொண்டதன் இனக் கீற்று ஆதிக்க நிலை.

rouleaux : சுருள் சிவப்பணுக்கள்; காசடுக்குச் சிவப்பணுக்கள் : நாணய அடுக்குப் போன்று இரத்தத்திலுள்ள இரத்தச் சிவப்பணுக்களின் வரிசை.

round cells : வட்டL அணுக்கள் : 10 முதல் 20 மைக்ரான் அளவுள்ள ஒரு வட்ட அல்லது நீள்வட்ட உயிர்க்கரு கொண்ட சிறுவெள்ளணுக்கள். நிண அணுக்கள், ஒர் அணுக்கள், குருதீச்சீர அணுக்கல், எபிதீலியாய் அணுக்கள் மற்றும் ஹிஸ் டியோசைட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

round ligament : உருளைப் பந்தகம் : 1. கருப்பையின் முன் பரப்பிலிருந்து துவங்கி கவட்டை அரைக்கால்வாய் வழியாக பேரிதுழ் வரையுள்ள நார்த்தசைப் பட்டை, 2. தொடையெலும்புத் தசைக்கும், இடுப்பெலும்புக்குழிவின் குறுக்குப்பிணையத்துக்கும் இடையிலுள்ள வளைந்த நாரிழைப்பட்டை.

rounds : பார்வையில் : நோயாளியின் உடல் நிலையில் முன்னேற் றத்தை பதிவு செய்வதோடு, தற்பொழுதைய நிலையை