பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/961

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

round window

960

rubor


மதிப்பிட்டு, மருத்துவம் பலன் தந்துள்ளதா எனக் கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளிகளை படுக்கையில் சந்தித்துப் பார்த்தல்.

round window : வட்டச் சன்னல் : நடுச்செவியின் உட்பக்கச் சுவரிலுள்ள வட்டத்துளை நத்தை எலும்புப் பக்கம் திறக்கிறது.

roundworm : நாக்குப் பூச்சி (உருண்டைப்புழு); உருளைப்புழு; நாகப்பூச்சி :உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்கள், மூச்சுக் குழாய்களுக்குப் பரவி முதிர்ந்த புழுக்களாக மீண்டும் இரைப்பைக்கு வருகிறது. இது சில சமயம், வாந்தியுடன் வெளிவந்து அச்சம் உண்டாக்கும். இதன் படையெடுப்பு அதிகமானால் சீத சன்னி (சளிக்காய்ச்சல்) ஏற்படும்; குடல் அடைப்பும் உண்டாகும் இதைக் குணமாக்க பிப்பராசின் சிறந்த மருந்து.

Rous sarcomavirus (RSV) : கோழிக் கழலைக் கிருமி : கழலைகளை உண்டாக்கும் ஒரு வகைக் கோழிக் கிருமிகள் ரிபோநூக்ளிக் அமிலத் (RSV) கழலைக் கிருமித் தொகுதியில் ஒன்று. இது பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ள போதிலும் இக்கிருமிகளை மனிதக் கழலைகளிலிருந்து பிரித்தெடுக்க இன்னும் முடியவில்லை.

rovsing's sign : இடுப்புப் பள்ள அழுத்தம் : இடது இடுப்புப் பள்ளத்தில் ஏற்படும் அழுத்தம் இது, குடல்வால் அழற்சியின் போது, வலது இடுப்புப் பள்ளத்தில் வலி உண்டாக்குகிறது.

rubefacients : சிவப்பாக்கும் மருந்துகள்; சிவப்பிப்பி : இரத்த வோட்டத்தை மிகைப்படுத்தி தோலைச் சிவக்கச் செய்கிற மேற்பூச்சுப் பொருள்.

rubber dam : ரப்பர் அணை : பல் மருத்துவ செய்முறையின்போது ஒன்று அல்லது மேற்பட்ட பற்களை விலக்கப் பயன்படுத்தும் மெல்லிய லேடக்ஸ் ரப்பர் தாள்.

rub : உராய்வு; உரசல் : உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு.

rubor : வீக்கச் சிவப்பு : வீக்கத் தின்போது ஏற்படும் நால்வகை சின்னங்களில் ஒன்றான சிவப்பு நிறம்.