பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/962

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ruffini's corpuscles

961

rusty sputum


Ruffini's corpuscles : ரஃப்பினி மெய்மங்கள் : இத்தாலிய உடற் கூறியலாளர் ஏஞ்சலோ ரஃப்பினியின் பெயரைப் பெற்று உள்ள, அழுத்தம், வெதுவெதுப்பு ஆகியவற்றை உணர்வதோடு தொடர்புள்ள சில நரம்பு முடியுமிடங்கள்.

rum fits : ரம் வலிப்புகள் : நாட்பட்ட குடிகாரர்களில் குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் வலிப்புகள்.

rumination syndrome : அசைபோடும் நோயியம் : மிக உடல் மெலிந்த சவலைக் குழந்தைகளில் அல்லது உணர்வு மற்றும் அறிவுக் குறைபாடுகள் உள்ளவர்களில் உணவை விழுங்கிய 10-15 நிமிடங்களில் உணவு பின்னேறி மேல் வருவதை வெளியில் துப்பிவிட்டு அல்லது மென்று முழுங்குதல்.

runner's knee : ஓட்டப்பந்தய வீரரின் முழங்கால் : வெகுதூர ஒட்டம் ஒடுபவரின் முழங்கால் மூட்டைத் தாங்கும் நார்த்திசு இறுக்கத்தால் முழங்கால் மூட்டின் வெளிப்பக்கம் தோன்றும் வலி.

rupia : கிரந்தி மற்றும் யாஸ் எனும் தொற்றுத்தோல் நோயில் காணப்படும் மஞ்சள் பழுப்புப் பொருக்கு மூடிய புண்கள்.

rusty lungs : தடித்த நுரையீரல் : ஹீமோசிடெரின் நிறமி நிறைந்த பெருவிழுங்கணுக்கள் குவிந்து பழுத்துத்தடித்த நுரையீரல்கள்.

rusty sputum : கெட்டியான கோழை; கெட்டி தொண்டைச்சளி : ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே கிருமியால் உண்டாகும் நிமோனியா நோயில் காணப்படும், கிருமிகள், இரத்தம், சீதம், அழிதிக கொண்ட கோழை.