பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/963

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



S

SAARD : எஸ்ஏஏஆர்டி : மெதுவாக வேலைசெய்யும் மூட்டு வாத எதிர் மருந்துக்கான ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துக் கூட்டு.

Sa : எஸ்ஏ(சா) : தமனிச் செறிவுக்கான கருக்கச் சொல்.

Sabin vaccine : சாபின் தடுப்பு மருந்து : ரஷியாவில் பிறந்த அமெரிக்க நச்சுயிரியலாளர் ஆல்பெர்ட் சாபின் தயாரித்த இளம்பிள்ளை வாதத் தடுப்பு சொட்டு மருந்து.

sabot heart : காலணியுரு இதயம் : ஃபேல்லாவின் நாற் குறைநோயில், எக்ஸ்ரே படத்தில் காணப்படும் காலணி போன்ற இதயத் தோற்றம்.

Sabraze's test : சேப்ரேஜின் சோதனை : 25 நொடிகளுக்கு மூச்சுப்பிடிக்கும் திறனை அளக்கும் மூச்சியக்க சோதனை. ஃபிரெஞ்சு மருத்துவர் ஜே.சேப்ரேஜ் பெயர் கொண்டது.

sabulous : பரலாந்த : மணல் போன்ற, பரல்போன்ற.

saccade : கண்துடிப்பு : பார்வையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற வேகமாக, தானாக கண்கள் திரும்புதல். சிறுமூளை அரைக் கோளக் கோளாறுகளில் காணப்படுவது.

saccate : பைஉரு : 1 பை போன்ற; 2 நீர்ப்பை கொண்ட.

saccharase : சேக்கரேஸ் : சுக்ரோஸ் போன்ற டைசேக்கரைடுகளை டெக்ஸ்ட்ரோஸ் போன்ற மானோசேக்கரைடுகளாகப் பிளக்கத் தூண்டும் நொதி.

saccharide : சேக்கரைடு : மானோ சேக்கரைடுகள் டைசேக்கரைடுகள் ஆலிகோசேக்கரைடுகள் மற்றும் பாலிசேக்கரைடுகள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் வரிசையில் ஒன்று.

saccharides : சர்க்கரை : கார்போஹைட்ரேட்டுகளின் மூன்று முக்கிய வகைகளில் ஒன்று. கரும்பு வெல்லம்.

saccharin : இனிப்பி; சர்க்கரைப் பதிலி; இனிப்பூட்டி : சர்க்கரைக்குப் பதிலாகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் பொருள். இது வெல்லத்தை ஒத்தது. தித்திப்பு மிக்கது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவர்.

saccharogalactorrhoea : சேக்கரோகேலக்டோரியா : பாலில்