பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/965

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sacrectomy

964

sacrum


எலும்பாக செயல்படும் தண்டுவட எலும்பு.

sacrectomy : திரிக நீக்கம் : வசதியாக ஒரு அறுவை செய்வதற்கு திரிக எலும்பை வெட்டியெடுத்தல்.

sacrifice : பலியிடல் : உள்ளுறுப்புகளில் பரிசோதனைக்குத் தேவைப்படும் சோதனை பழி முறையின் பகுதியாக அல்லது பரிசோதனை முடிந்தவுடன், சோதனைச் சாலைப்பிராணிகளைக் கொல்லுதல்.

sacroanterior : திரிகமுன் (நீட்டல்) : முதிர்கருவின் திரிக எலும்பு முன் நோக்கியிருத்தல்.

sacrococcygeal : திரிகப்புச்ச என்புசார் : திரிக எலும்பு, புச்ச எலும்பு சார்ந்த.

sacrococcygeus : திரிகப்புச்சத் தசை : திரிக எலும்பிலிருந்து புச்ச எலும்பு வரை நீண்டுள்ள இரு சிறு தசைகளில் ஒன்று.

sacrocoxalgia : திரிக இடுப்பு வலி : திரிகப்புடை மூட்டில் வலி.

sacrocoxitis : திரிகக்கூபக அழற்சி : திரிகப்புடை முட்டு அழற்சி.

sacrodynia : திரிகபகுதி வலி : திரிக எலும்புப் பகுதியில் வலி.

sacroiliac : புனித எலும்பு-பின் இடுப்பெலும்பு சார்ந்த : புனித எலும்பு-பின் இடுப்பெலும்பு தொடர்புடைய.

sacroilitis : புனித எலும்பு மூட்டு அழற்சி : இடுப்புக்குழி இணைப்பு எலும்பு முட்டுகளில் உண்டாகும் வீக்கம்.

sacrolisthesis : திரிக நழுவல் : திரிக எலும்பு நழுவி, ஐந்தாவது கீழ் முதுகெலும்புக்கு முன்னால் உள்ள குறைபாடு.

sacrolumbar : புனித எலும்பு-இடுப்பு சார்ந்த : இடுப்புக்குழி இணைப்பு எலும்பும், இடுப்பும் தொடர்புடைய.

sacroposterior : திரிக பின்னிருப்பு : முதிர் கருவில் திரிக எலும்பு பின்னிருத்தல்.

sacrosciatic : திரிக இடுப்புசார் : திரிக எலும்பு மற்றும் இருக்கை என்பு சார்ந்த.

sacrospinal : திரிகமுள்ள : திரிக எலும்பு மற்றும் முதுகெலும்புத் தண்டு சார்ந்த.

sacrotomy : திரிகவெட்டு : திரிக எலும்பின் கீழ்ப்பகுதியை வெட்டியெடுத்தல்.

sacrouterine : திரிக கருப்பைசார் : திரிக எலும்பு மற்றும் கருப்பை சார்ந்த.

sacrum : புனித எலும்பு; திரிகம்; பிட்ட எலும்பு : இடுப்புக்குழி மூட்டு முக்கோண எலும்பு. வயிற்றுப் பக்க முதுகெலும்புக்கும். வால்பக்க முதுகெலும்புக்கும் இடையில் அமைந்து உள்ளது. இது ஒன்றாக இணைக்கப்பட்ட ஐந்து முள்ளெலும்புகளைக் கொண்டது.