பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alimentology

96

aikalitide


alimentology : உணவியல்.

alimentotherapy : உணவு மருத்துவம்.

aliphatic : கொழுப்பார்ந்த : கொழுப்பு சேர்ந்த அல்லது எண்ணெய் சேர்ந்த, சைக்ளிக் கார்பன் பொருள்கள் தொடர் புடைய.

கொழுப்பு அமிலங்கள் ; அசிட்டிக் அமிலம் புரோப்பியானிக் அமிலம் மற்றும் பூட்ரிக் அமிலம் போன்றவை.

alipogenic : கொழுப்பேற்ற மில்லா.

alipoidic : கொழுப்பிலா.

aliquot : சரிநேர்கூறான; சரி ஈவான : முழுமையான ஒரு பகுதி.

alisphenoid : ஆப்பெலும்பின் பெரும் பக்க தளத்தைத் தொடர்பு உடைய.

alkalaemia : மிகைக் காரக் குருதி; குருதிக் காரமிகை; இரத்தக் கார மிகைப்பு : இரத்தத்தில் காரக் கூறுகள் இயல்புக்கு மீறி இருத்தல். அல்லது அதிகப்படுதல்.

alkali : காரப்பொருள்; வன்காரம்; காரம் : சோடா, பொட்டாஷ், அம்மோனியா போன்ற கரையக்கூடிய, அரிமானத் தன்மை உடைய உப்பு மூலப்பொருள். இது அமிலத்தின் முனைப் பிழந்து உப்புகளாக மாறுகிறது: கொழுப்புகளுடன் இணைந்து சவர்க்காரமாகிறது. காரக் கரைசல், சிவப்புலிட்மசை நீலமாக மாற்றுகிறது.

alkalify : காரமாக்கல்.

alkalimeter : காரமானி, காச அளவி.

alkalimetry : கார் அளவி.

alkaline : காரத்தன்மையுடைய; காரமான : 1. ஒரு காரப்பொருளின் இயல்புகளைக் கொண்டிருத்தல்; 2. ஹைட்ராக்சில் அயனிகளை மிகுதியாகக் கொண்டிருத்தல். இரத்தத்தில் காரஃபாஸ்பேட் இருக்குமானால், அது மஞ்சட் காமாலை, பல்வேறு எலும்பு நோய்கள் இருப்பதைக் குறிக்கும்.

alkalinephosphatase : காரபாஸ்பேட் போக்கி.

alkalinity : காரத்தன்மை.

alkalinuria : சிறுநீர்க்காரம்; சிறு நீரில் காரக்கூறுகள் : சிறு நீரில் காரத்தன்மை இருத்தல்.

alkalism : காரமாக்கி, காசப்படுத்தி.

alkalireserve : அமிலக்காரச் சேமிப்பி.

alkalitherapy : அமிலக்கார மருத்துவம்.

alkalitide : அமிலக்காரப் பொருக்கம்.