பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/970

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

salpinogorrhaphy

969

salt wasting dis...


கான மருத்துவத்துக்காக மேற்கொள்ளப்படும் ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலின் சீரமைப்பு அறுவை.

salpinogorrhaphy : குழல்தைப்பு : ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலில் தையலிடல்.

salpingosalpingostomy : குழல்-குழல்துளை : ஒரு ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலை மற்றொன்றுடன் இணைக்கும் அறுவைச் செயல்முறை.

salpingoscope : குழல் நோக்கி : தொண்டையின் மூக்குப் பகுதியையும், யூஸ்டேச்சியன் குழலையும் பரிசோதிக்கும் கருவி.

salpinogostenochoria : குழற் குறுக்கம் : யூஸ்டேச்சியன் குழலின் குறுக்கம் அல்லது ஒடுக்கம்.

salpinogostomy : குழற்துளைப்பு : ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழல் அடைபட்டுள்ள நிலையில் துளை செய்யும் அறுவைச் செயல்முறை.

salpinx : கருக்குழாய்; அண்டக் குழல் : முன் தொண்டையிலிருந்து நடுக்காதுக் குழிவரையில் செல்லும் குழாய் அல்லது கருப்பையிலிருந்து கருவெளியேறும் குழாய்.

saisalate : சால்சலேட் : வீக்கம் தணிக்கும் மருந்து. இது சாலிசிலிக் அமிலத்தின் ஒரு கூறு. இது இரைப்பை நீரில் கரையாதது. இதனால் இது இரைப்பை எரிச்சலையும், அரிமானத்தையும் உண்டாக்குவதில்லை.

saltation : குதிப்பு இசிப்பு : 1. கோரியாவில் குதித்தல் அல்லது நடனமாடுதல். 2. (மரபணு) மாற்றம், 3. ஒரு நோயின் வளர் நிலையில் திடீர் மாற்றம்.

saltatory conduction : குதிப்புக் கடத்தல் : கொழுப்புறைகொண்ட நரம்பிழையின் வழியாக கடத்தப்படும் நரம்புத் தூண்டல்.

salf free diet : உப்பில்லா உணவு : நாள் ஒன்றுக்கு 500 மில்லி கிராம் அல்லது அதற்குக் குறைவான அளவு மட்டும் கொண்டு குறைசோடிய உணவு.

salt wasting disease : உப்பு இழக்கும் நோய்; உப்பு வெளி யேற்றும் நோய் : சிறுநீரக நீர்க் கட்டி நோய், சிறுநீரடைப்பு நோய், நுண்குழலக்குடலநோய், அண்ணீரகப் புறணிக்குறை அல்லது இரைப்பைக் குடல நோய் உள்ளவர்களில் உடலிலிருந்து சோடியம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். நீரிழப்பையும், சிறுநீரக இயக்கம் மோசமடைவதையும் தடுக்க சோடியம் மற்றும் நீர் அதிகமாக இந்நோயாளிகளுக்கு தேவைப் படுகிறது.