பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/973

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SA node

972

sarcocarcinoma


SA mode : புழைமேலறைக்கணு : இதயத்தின் புழைமேலறைக்கணு.

sap : உயிர்ச்சாறு : 1. உயிர்வாழ அவசியமான முக்கியமான சாறு, 2. கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடைதல் அல்லது வலிமையிழத்தல்.

saphena : தெளிவு பளிங்குச்சிரை : ஒரு பளிங்குச்சிரை வீக்கம், பெரும் பளிங்குச் சிரை துவங்குமிடத்தில் ஒரு சிரை வீக்கம்.

saphenectomy : பளிங்குச்சிரை நீக்கம் : பளிங்குச்சிரையை அறுவை செய்து நீக்குதல்.

saphenous : தெளிவு; பளிங்கு : பளிங்குச்சிரை அல்லது காலில் உள்ள பளிங்க நரம்பு பற்றிய.

sapid : சுவையுடைய : சுவையான, சுவையுணர்வால் கண்டுபிடிப்பது.

sapophore : சுவைக்கூறு : ஒரு பொருளுக்கு கவைதரும் மூலக் கூறுப் பகுதிப் பொருள்.

saporific : சுவைதரும் : சுவை அல்லது மணம் தரும்.

sapraemia : குருதி நச்சு : ஒரு நஞ்சு குருதியோடு சேர்ந்து உடலில் கற்றோட்டமாகச் செல்வதால் உடலில் பொதுவாக உண்டாகும் நச்சுத்தன்மை, அழுகிய கரிமப் பொருள்களில் வாழும் தாவர உயிர்கள் சிதை வதால் இது உண்டாகிறது.

saprobe : கெடுநீர்வாழ் உயிர்மம் : ஒளிச் சேர்க்கைப் பொருள் இல்லாத பூஞ்சைக் காளான் போன்ற செத்து அழுகிய பொருள்களை சார்ந்து வாழும் உயிரி.

saprophilous : அழுகல்சார் உயிர் : அழுகிய பொருள்களில் வாழும்.

saprophyte : அழுகல் பொருள் நுண்மம் : அழுகிய கரிமப் பொருள் வாழும் தாவர நுண்ணுயிரிகள்.

saralasin : சாராலேசின் : இரத்தக்கொதிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஆஞ்சியோ டென்சின்-2 எதிர்ப்பொருள்.

sarcina : சார்சினா : மண்ணிலும் நீரிலும் வாழும் மைக்ரோகாக் காஸ்களின் குடும்பம் சேர்ந்த அழுகல் வாழ் உருள் நுண்ணுயிர் இனம்.

sarcitis : தசையழற்சி : தசைத் திசுவின் அழற்சி.

sarcoadenoma : சுரப்பு இணைப்பு திசுப் புற்று : ஒரு சுரப்பியின் சதைக்கட்டி.

sarcoblast : தசைமுன்னணு : தசையணுவாக வளரப்போகும் ஆதியணு.

sarcocarcinoma : இணைப்புத்திசு மேற்றொலிப்புற்று : இணைப் புத்திசுப் புற்று மற்றும் புறத்