பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/983

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

schizoid

982

scimitar syndrome


இந்த நோய்க்கான 9 காரணங்களை 1961 ஒரு வல்லுநர் குழுவினர் வகுத்துரைத்துள்ளனர்.

schizoid : பிளவுநிலை : 1. பிளவு மனம் போன்ற இயல்பு 2. பிளவுநிலை ஆளுமையை குண நலனாகக்கொண்ட பண்பியல்பு.

schilatter's disease : ஷிலாட்டர் நோய் : எலும்புக்கும் கருமூல மான வெண்ணில நிறமுடைய கெட்டியான மணிப்பசைப் பொருளில் ஏற்படும் அழற்சி.

schlemm's canal : கருவிழி நிணநீர்க்குழாய் : விழி வெண்படலத்திற்கு அருகே, சூழ்ந்திருக்கும் கருவிழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் குழாய்த் தொகுதி.

scholz's disease : ஸ்கோல் நோய் : மரபு வழித் தோன்றும் இனச் சிதைவு நோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது.

shuffner's dots : ஷீஃப்னரின் புள்ளிகள் : ஜெர்மானிய ஒட்டுண் னியியலாளர் வில்ஹெல்ம் ஷீஃப்னரின் பெயர் கொண்டவை வாக்ஸ் மலேரியா காய்ச்சலில் காணப்படும் புள்ளிகள் கொண்ட இரத்தச் சிவப்பணுக்கள்.

Schwann cell : ஸ்ஷ்ச்வான் அணு : ஜெர்மன் உடற்கூறியலார் தியோடார் ஸ்ஷ்ச்வான் பெயர் கொண்ட வெளிப்பரப்பு நரம்பு மண்டல அணுக்களில் ஒன்று, புறப்பரப்பு நரம்பிழைகளுக்கு மற்றும் நரம்புறையும் உண்டாக்குவது.

Schwartze mastoidectomy : ஸ்ஷ்ச்வார்ட்ஸ் முகைய என்பு நீக்கம் : ஜெர்மன் செவியியலார் ஹெச் ஸ்ஷ்ச்வார்ட்ஸ் பெயராலழைக்கப்படும் நடுச்செவியைத் தொடாமல் கிடைக்கக் கூடிய எல்லா அணுக்களையும் முகையக் குழிவறையையும் அறுத்து நீக்கல்.

Schwartze sign : ஸ்ச்ஷ்வார்ட்ஸ் குறி : செவி இறுக்கத்தில் செவிப் பறையின் ஊடாகக் காணப்படும் ஒளிர் இளஞ் சிவப்பு நிறம்.

sciatic இடுப்புசார் : இருக்கை யென்பு அல்லது இடுப்பு சார்.

sciatica : இடுப்புச் சந்து வாதம்; இடுப்பு வலி : பிட்டம், பின் தொடை, பின் கால் தசை, பாதம் ஆகியவை சார்ந்த இடுப்புச் சார்ந்த நரம்புகளில் ஏற்படும் வலி.

scieropia : நிழற்காட்சி : பொருள்கள் அவற்றின் நிழலாகத் தெரியும் பார்வைக் கோளாறு.

scimitar syndrome : கொடுவாள் நோயியம் : அபூர்வமான நாளக் கோளாறில் நுரையீரல் சிரை