பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/988

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scrofuloderma

987

Sebum


scrofuloderma : கண்ட மாலைப் புண் : எலும்பு அல்லது நிண நீர்ச் சுரப்பிகளின் கீழ், காச நோய்ப் புண்கள் காரணமாகத் தோலில் ஏற்படும் நைவுப்புண்.

scrotoplasty : விரைப்பை சீரறுவை : விரைப்பையை மறு சீரமைக்கும் அறுவை.

scrotum : அண்டகோசம் : விரைப்பை ஆண்களின் விரைப்பை.

scrub nurse : அறுவை உதவி செவிலியர் : தொற்று நீக்கிய அறுவை மருத்துவத்தில் கலந்து கொள்ளும் செவிலியர்.

scuf : பிடரி கழுத்தின் பின்புறம்.

scurt : பொடுகு : தோல் பொருக்கு உதிர்தொலி, கழி தோல், வங்கு மேற்புறச்செதிள்.

scurvy : எதிர் வீக்கம் : வைட்ட மின்-சி உயிர்ச்சத்துப் பற்றாக் குறை காரணமாக ஏற்படும் சொறிகரப்பான், பல் எகிர்வீக்க நோய். இதனால் சோர்வும் பல்லில் குருதிக்கசிவும் உண்டாகும்.

scurvy-grass : எதிர்வீக்க மருந்துச்செடி : வைட்டமின்-சி உயிர்ச்சத்துக் குறைபாட்டி னால் உண்டாகும் எகிர்வீக்கக் கோளாறைக் குணப்படுத்தும் கடுகுக் குடும்பச் செடி.

scutiform : கேடயவுரு : கேடயத்தைப் போன்ற வடிவம் கொண்ட.

scutum : முட்டுச் சில்லு : ஒட்டுண்ணிகளின் மேல்புறக் கவசத்தோடு.

searcher : தேடுகருவி : சிறு நீர்ப்பையில் கல் உள்ளதா எனக் கண்டறியும் ஒரு (உலோகக்) கருவி.

sebaceous : கொழுப்பு சார்ந்த; சர்ம மெழுகு.

sebaceous cyst : எண்ணெய் சுரப்பி அடைப்பு : தோலிலுள்ள எண்ணெய் சுரக்கும் சுரப்பி அடைபடுதல்.

sebaceous duct : மயிர்ப்பை எண்ணெய்க்குழாய்.

sebaceous follicle : மயிர் மூட்டுப்பை.

sebaceous gland : மயிர்ப்பை எண்ணெய்ச் சுரப்பி; சர்ம மெழுகு சுரப்பி.

sebaceous humour : மயிர்ப்பை நெய்மம்.

seborrhoea : உச்சித் தோல் நெய்ப்பசை; மயிரடிச் சுரப்பு மிகைப்பு; மெழுகு ஊறல் : மயிர்க்கால் எண்ணெய்ச் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உச்சிவட்டக் குடுமித் தோலில் உண்டாகும் நெய்ப்பசை.

sebum : மயிர்க்கால் எண்ணெய்; நெய்யம்; சர்ம மெழுகு : மயிர்க் கால் எண்ணெய்ச் சுரப்பிகளில்