பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

secobarbitai

988

sediment...


இயற்கையாகச் சுருக்கும் எண்ணெய். இதில் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பு, இறந்த உயிரணுக்கள் அடங்கியிருக்கும்.

secobarbital : சீக்கோபார்பிட்டல் : தூக்க மூட்டியாகவும் அமைதிப் படுத்தியாகவும் பயன்படுத்தப்படும் குறுங்காலத்துக்கு செயல்படும் பார்பிட்டுரேட்.

second opinion : மறு அறிவுரை : நோய்காணல் சரியாக அறிவுறுத்தப் பட்ட மருத்துவ முறை ஏற்றதுதானா என மற்றொரு நலவாழ்வு ஆலோசகரிடம் பெறும் (டாக்டரின்) அறிவுரை.

secondary sypphilis : இரண்டாம் நிலைக் கிரந்தி.

secondary immunisation : மறு முறை நோய்த் தடுப்பு.

secretagogue : சுரப்பூக்கி : 1. சுரப்பை ஊக்குதல் 2. சுரப்பை ஊக்குவிக்கும் பொருள்.

secretin : முன் சிறுகுடல் சுருப்பு நீர் : முன் சிறுகுடல் சவ்வுப்பட லத்தில் சுரக்கும் ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது கணையநீர் பெருமளவு சுரக்கத் துண்டுகிறது.

secretion : சுரப்புநீர் சுரத்தல் : உடலிலுள்ள ஒரு சுரப்பியில் சுரந்து, உணவுக்குழாய்க்கு அல்லது இரத்தத்திற்கு அல்லது புறத்தே செல்லும் நீர்மப் பொருள்.

secretogogue : சுரப்பூக்கி : மின்பகுப்புப் பொருளையும் நீர்மத்தையும் இரைப்பைக் குடல் சுரக்க ஊக்கும் பொருள்.

secretomotor : சுரப்பியக்க : சுரப்பைத் தூண்டும் (நரம்புகளை குறிக்கும்).

secretor : சுரப்பி : 1. உமிழ்நீர், இரைப்பைப் பாகு அல்லது விந்து நீரில், ஏபிஓ இரத்த வகைக்கான, விளைவியங்களை சுரக்கும் ஒருவர். 2. கரப்பிகள் குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் முறை.

secretory : சுரப்பித்தல் : ஒரு சுரப்பி, சுரப்பு நீரை சுரப்பிக்கும் செயல்.

sedation : சமனப்படுத்துதல்; அமைதியூட்டல் : உணர்ச்சியைச் சமனப்படுத்துதல்.

sedative : சமன மருந்து; அமைதியூட்டி : உணர்ச்சியைச் சமனப்படுத்தும் மருந்து நோவகற்றும் மருந்து.

sedentary : உடலியக்கமில்லா : 1. அதிகம் உட்கார்ந்த நிலை, 2. உட்கார்ந்து பொழுதை கழிக்கிற, 3. குறைவான உடற்பயிற்சியோடு வாழும் முறை.

sediment : படிவு; மண்டி; வண்டல்.

sedimentation rate : படிவு வேகம் : இரத்தச் சிவப்பணுக்கள் படிவுறும் வேகம்.