பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

allantois

98

allobiosis


allantois : பனிக்குடம் : கருவின் மஞ்சள் கருப்பையிலிருந்து உருவாகும் கருவெளியறை.

allegrid : ஒவ்வாமைத் தடிப்பு.

allegron : அல்லெக்ரோன் : 'நார்ட்ரிப்டிலின்' என்ற மருந்தின் வணிகப்பெயர்.

alleles : இரட்டை மரபணு.

allelomorphs : இணை இனக் கீற்று : மெண்டல் என்ற அறிவியல் அறிஞரின் கருத்துப்படி உயிர்களின் மரபுவழியில் மாற்றி மாற்றித் தொடரும் இரட்டைப் பண்புக்கூறுகளில் (இணை இனக்கீற்று) ஒன்று. எடுத்துக் காட்டாக, இயல்பான நிறப்பார்வை அல்லது நிறக்குருடு, சில பொருள் களைச் சுவைக்கும் திறன் அல்லது சுவைக்க இயலாமை ஆகியவை மாறிமாறித் தோன்றக் கூடும். ஒரே இனக்கீற்று இடச்சூழலில் ஒரு மரபணுவின் மாற்று வடிவங்கள் இருப்பதால் இது தோன்றுகிறது.

allergen : ஒவ்வாமை ஊக்கி : ஒரு நோய்த்தடைக்காப்புத் திறனுக்கு மாறுபட்ட நிலையை அல்லது அறிகுறியை உண்டாக்கக்கூடிய உயிர்த் தற்காப்புப் பொருள்.

allergenic : ஒவ்வாமை ஊக்கல்.

allergist : ஒவ்வாமை மருத்துவ வல்லுநர். ஒவ்வாமையால் விளையும் கேடுகளைக் களையும்மருத்துவ வல்லுநர்.

allergology : ஒவ்வாமையியல்.

allergosis : ஒவ்வாமை நோய்.

allergy : ஒவ்வாமை : உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எதிர்விளைவுகள், காஞ்சொறித் தடிப்புகள், மூச்சுத்தடையுடன் கூடிய இருமல் (ஆஸ்துமா) போன்றவை சில ஒவ்வாமை நோய்கள்.

alli's forceps : அல்லீஸ் இடுக்கி.

aligation : பண்பறி பகுப்பாய்வு.

allgator forceps : அல்லிகேட்டர் இடுக்கி.

alloantibody : மாற்றப்பண்புக் கூற்று எதிர் அங்கம் : ஒரு குறிப்பிட்ட மாற்றப் பண்புக்கூறுக்கு உருவாகும் எதிர் அங்கம்.

alioantigen : மாற்றப் பண்புக்கூறு உடற்காப்பு ஊக்கி : குறிப்பிட்ட மாற்றப் பண்புக் கூறுக்கு உருவாகும் உடற்காப்பு ஊக்கி,

allobarbital : அல்லோபார் பிட்டால் : பார்பிச்சூரிக் அமிலத் திலிருந்து தயாரிக்கப்படும் உறக்க ஊக்கி மற்றும் உறக்க மருந்தாகும்.

alłobiosis : அடிக்கடி மாற்றமுறும் நுண்ணியிரிகள்.