பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/990

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

seed

989

Semeiotic


seed : விதை : 1. ஆண் இனப் பெருக்க நீர், விந்தணு, 2. புதிய தாவரங்கள் அல்லது பிராணிகள் உற்பத்தியாவதற்காக, தாவரங்கள் மற்றும் பிராணிகள் உண்டாக்கும் பொருள். 3. ரேடான் அல்லது ரேடியம் கொண்டகேப்சூல்) மருந்துறை.

segmentation : உடற்கூறு துண்டம்; துண்டுபடுதல் : 1. ஒரே மாதிரியான பகுதிகளாக பிளவுறுதல், 2. பெருங்குடல் பிளவு பெருங்குடலில் சுருக்க வளையங்கள் மெதுவாக உருவாவதும் விரிவடைவதும்.

segregation : தனிமைபடுத்துதல்; பிரித்தல்; ஒதுக்கம் : மர பணுவியலின், இணை இனக்கீற்றுகளை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து வைத்தல். கருமுனை அணுக்களின் அணு இயக்க மாற்றத்தின்போது இவ் வாறு செய்யப்படுகிறது.

seizure : திடீர்நோய்ப்பிடிப்பு : 1. ஒரு நோய் திடீரென்று தாக்குவதும் மீண்டும் வருவதும். 2. மூளையிலிருந்து ஒரு மின் தூண்டல் உண்டாக்கும் நிகழ்ச்சி.

Seldinger needle : செல்டிங்கர் ஊசி : தமனிக்குள் குழலைச் செருகுவதற்குப் பயன்படும் ஊசி. ஊசியின் வழியாக ஒரு வழிகாட்டும் கம்பியைச்செலுத்தி பிறகு வழிகாட்டும் கம்பி வழியாக குழலைச் செலுத்து தல், ஸ்வீடன் நாட்டு மருத்துவர் ஸ்பென் செல்டிங்கர் பெயர் கொண்டது.

selenomethionine : செலனோ மெத்தியோனைகள் : அமினோ அமில மெத்தியோனைனில் இருக்கும் கந்தக அணுவுக்குப் பதிலாகக் கதிரியக்கச் செலினியத்தை மாற்றி வைக்கும் ஒரு ஊசி மருந்து. இது கணைய நோய்களைக் கண்டறியப் பயன் படுகிறது.

self-infection : தன்னோய் இழைப்பு; தன்னோய் தொற்றல் : உடலின் ஒரு பகுதயிலிருந்து இன்னொரு பகுதிக்கு நுண்ணுயிரிகளைத் தன்னையறியாமல் மாற்றுதல். இதனால் மற்ற பகுதியில் நோய் உண்டாகும்.

sella turcica : கபச் சுரப்பிக்குழி.

semantics : சொற்பொருள் ஆய்வியல் : சொற்களுக்கு பொருள் உருவானதைப் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த பாடம்.

semeiography : நோய்க்குறி விளக்கம் : ஒரு நோயின் உடல் தன்மைகளையும் அறிகுறிகளையும் உணர்குறிகளையும் பற்றிய விளக்கம்.

semeiotic : நோய்க்குறிதொடர்பான : 1. அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் தொடர்பான.