பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/991

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

semen

990

Semon's law


2. நோய் இன்னதென்று குறிப் பிட்டுக் காட்டுகிற.

semen : விந்து (ஆண் கரு); விந்துநீர் : விந்துப்பைகளிலிருந்து சுரக்கும் விந்து நீர். இதில் பெண்கருமுட்டைக்குப் பொலி ஆட்டும் விந்தணு உள்ளது.

semicircular canals : அரைவட்டக் குழல்கள் : உட்செவி வளையுறுப்புகள்.

semicoma : அரைகுறைச் சன்னி மயக்கம்; அரை நினைவு.

semicomatose : அரைகுறைச் சன்னி மயக்குமுள்ள; மயக்குறும் நிலை :அரை மயக்கம் அல்லது அரை நினைவு மயக்கத்திலிருக்கும் நிலை.

semiflexion : பாதிமடக்கம் : மடக்கலுக்கும் நீட்டலுக்கும் இடைப்பட்ட உறுப்பின் நிலை.

seminuria : விந்துச்சிறுநீர் : சிறுநீரில் விந்து வெளியாதல்.

semina : விந்து சார்ந்த : விந்து தொடர்புடைய விதை போன்ற.

seminiferous : விந்து கொண்டு செல்கிற; விந்து நுண் குழல்கள்; விந்தேந்தி : விந்தினை உண்டாக்குகிற ஆணின் கருவைக் கொண்டு செல்லுகிற.

seminoma : விரைக்கட்டி; விரைப் புற்றுக்கட்டி : விரையில் ஏற்படும் உக்கிரமான கட்டி.

semiology (semiotics) : நோய்க் குறியியல் : நோய்க் குறிகளை ஆராயும் அறிவியல்.

semipermeable : நீர்புகும் சவ்வு; நீர் ஊடுருவும் சவ்வு : கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற சவ்வு.

semiquantitative : அளவுக்குக் குறைவான : அளவினடிப்படையான முடிவுக்கு கொஞ்சம் குறைந்த ஒரு பொருளினளவு.

semisulcus : சிறுகுழிவு : ஒரு அமைப்பு அல்லது ஒரு எலும்பின் ஒரத்திலுள்ள ஒரளவான கோட்டுக் குழிவு.

semisupination : ஓரளவு முன் திருப்பல் : மல்லாந்து படுத்தலுக்கும் குப்புறப்படுத்தலுக்கும் இடையில் உள்ள நிலை.

semisynthetic : ஓரளவு கூட்டிணைந்த : ஒரு இயற்கைப் பொருளுக்கு விரும்பத்தக்க குணங்களை ஏற்படுத்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டிணைப்புப் படிநிலைகளால் உருவான ஒரு வேதியக் கூட்டுப்பொருள்.

Semon's law : சீமன் விதி : பிரிட்டன் நாட்டு தொண்டையியலார் ஃபெலிக்ஸ் சீமன் பெயரிட்டவிதிப்படி மீள்குரல் வளை செயலிழப்பு அதிகமாவ