பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/992

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Semple vaccine

991

sensitivity


தால் குரண்நாண் நடுநெருங்கு முன் நடுவிலகலை இழப்பது.

Semple vaccine : செம்பிள் தடுப்பூசி : பிரிட்டன் நுண்ணுயிரியலாளர் டேவிட் செம்பிள் பெயர் கொண்ட முயல்மூளைத் தொற்றை ஃபீனால் கொண்டு, செயலிழக்கச் செய்ய தயாரிக்கப்பட்ட வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி.

senescence : மூப்படைதல்; முதுமைக்கூர்வு; முதுகை : வயது முதிரும்போது உடலிலும் உள்ளத்திலும் இயல்பாக ஏற்படும் மாறுதல்கள். கிழத் தன்மையுறுதல்.

senile : முதுமைத்தளர்ச்சி; மூப்பு : வயது சென்றதன் காரணமாக ஏற்படும் முதுமைத் தளர்ச்சி.

senility : முதுமை : முதுமைத் தளர்வு. கிழத்தன்மை.

senna : நிலவாவிரை (சென்னா) : மலமிளக்கி (பேதி) மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலவா விரை என்னும் செடி இனம். இதன் இலைகளும் நெற்றுகளும் பேதி மருந்தாக இந்தியாவிலும், எகிப்திலும் பயன்படுத் தப்பட்டன.

Senokot : செனோக்கோட் : தரப்படுத்திய நிலவா விரை (சென்னா) மருந்தின் வணிகப் பெயர்.

senopia : முதுமைப்பார்வை : விழிவில்லை உட்கருகாழ்ப்பு அதிகரிப்பதால் முதியவர்களில் கிட்டப்பார்வையில் முன்னேற்றம் தெரிதல். இறுதியில் அது உட்கருப்புரை உண்டாக்குகிறது.

sensation : உணர்வறிவு : உடலுக்குள்ளிருந்து வெளி மூலங் களிலிருந்தும் பெறப்பட்ட உணர்வுகளை உணர்ந்தறிதல்.

sense : உணர்வு : 1. உணர்வு, பொருட்களை அறியும் ஆற்றல். 2. நிறம் பொறுத்து நிற வேறுபாடுகளை அறியும் திறன். 3. மூட்டுணர்வு, தசையுணர்வு, இயக்க உணர்வு, செயப்பாட்டு இயக்கம், பாகுபடுத்தியுணர்தல்.

sensibility : உணர்திறன் : உணர்ச்சித் தூண்டல்களை உணரக்கூடிய திறமை.

sensible : புலனுணர்வு; புலனறி; புலனாகு : புலன்களால் உணரக் கூடிய தன்மை, உணர்வுள்ள.

sensitive : உணர்வுத் திறன் கொண்ட : 1. உணர்வுகளை உணரும் திறன். 2. தூண்டலுக்கு ஏற்பச் செயல்படுதல். 3. முன் பட்டறிவால் பாதிக்கப்பட்ட ஒருவர்.

sensitivity : உணர்ச்சித்திறன்; கூருணர்வு : மிகு உணர்வு, உணர்ச்சித் தன்மை, துச்ச உணர்வு.