பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sham feeding

997

shiatsu


sham feeding : புறப்பாலூட்டம்.

shape : வடிவம் : 1. உருவரை, வெளிஉருவம். 2 ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்கேற்ப அமைத்தல்.

shaping : மாற்றியமைத்தல் : புது நடத்தையை உருவாக்க செய்யப் படும் நடத்தை மாற்ற மருத்துவ முறை.

shear : கத்தரி : ஒரு பொருளின் தளங்களுக்கு இணையாக ஆனால் எதிர்த் திசையில் செலுத்தப்படும் அழுத்தம்.

shearing force : உராய்வு சக்தி : தாங்கப்படும் உடலின் பகுதி எதுவும், சாய்வாக இருக்குமானால், எலும்பின் அருகிலுள்ள ஆழமான திசுக்கள் தாழ்ந்த சரிவை நோக்கி நகர்கின்றன. அதே சமயம், உராய்வு காரணமாகத் தாங்கப்படும் பரப்புடன் தோல் தொடர்ந்து இருக்கும். இந்த உராய்வு ஈரம் காரணமாக அதிகரிக்கிறது. இரத்த நாளங்கள் நீட்டப்பட்டு கோணவடிவ மாகின்றன. இதனால், ஆழமான திசுக்கள் நலிந்து, இழைம அழுகல் ஏற்படுகிறது.

sheath : உறை : குழலுறை, ஒடு அல்லது காப்புறை.

sheepskin : மயிர்க் கம்பளி : அழுத்தப் புண்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக இயற்கையான அல்லது செயற்கையான மயிர்க் கம்பளிகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளி படுத்த படுக்கையாக அல்லது நாற் காலியில் சாய்ந்து இருக்கும் போது இந்தக் கம்பளிகள் அழுத்தந்தாங்கும் பகுதிகளில் பரப்பி வைக்கப்படுகின்றன.

shelf life : காப்பு வாழ்நாள் : கழிப்பதற்குமுன், பொருத்தமான சூழ்நிலைகளில் ஒரு சிகிச்சைப் பொருள் அல்லது இரத்தப் பொருள் பாதுகாத்து வைக்கப்படும் காலநேரம்.

shelf operation : பந்துக்கிண்ண மூட்டு அறுவை : பிறவியில் உண்டாகும் இடுப்பு மூட்டுப் பெயர்வில் தொடை எலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவில் செய்யப்படும் அறுவை மருத்துவம். 7-8 ஆண்டுக்காலச் சிகிச்சை பலனளிக்காதபோது, இது செய்யப்படுகிறது.

shiatsu : ஷியாட்சு : மனிதத் தோலில் உட்புறமாக ஏற்படும் தவறான இயக்கத்தைச் சீர்படுத்துவதற்காகவும், குறிப்பிட்ட திசுக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் குணப்படுத்துவதற்காகவும், கருவிகள் ஏதுமின்றி, பெருவிரல்கள், விரல்கள், உள்ளங்கை மூலம் செய்யும் கைவினை மருத்துவம்.