பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மருத்துவ விஞ்ஞானிகள்


உற்பத்தி இடங்கள் அழிக்கப்பட்டன. வெள்ளைக்காரர்களின் கல்லறை என்ற பெயர் ரோஸ் பெயரால் புதுப்பிக்கப்பட்டு. அழகு இடமானது. அந் நகர மக்கள் ரொனால் ரோசைத் தெய்வமாக மதித்தார்கள் ரோஸ் புகழ் மேலும் மேலும் பரவியது.

போர்ட் சைத்’ க்கும், சூயஸ் கால்வாய்க்கும் இடையிலுள்ள ‘இஸ்மைலியா’ என்ற நகரத்தில், 1900-ஆம் ஆண்டில் மலேரியா நோய் கண்டதால், ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தார்கள். அதனால் சூயஸ் கால்வாய் தலைவர் ரோசுக்கு வரவேற்பு வழங்கினார். அங்கே சென்ற ரோஸ் கொசு உற்பத்தி இடங்களைப் புதுப்பித்து,மலேரியா வரும் அறிகுறிகளே இல்லாமல், அதை எழில் நகரமாக்கினார்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் ரோசின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தை எற்று மலேரியா நோயை ஒழித்தார்கள்! மக்கள் சமுதாயத்தை விட்டு மலேரியா கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

மக்களுக்கு ரொனால்டு ரோஸ் ஆற்றிய மலேரியா ஒழிப்பு சேவையின் சார்பாக, ரோஸ் இன்ஸ்டியூட் அண்டு ஹாஸ்பிட்டல் பார் டிராபிக்கல் டிசீஸ் என்ற கல்லூரி 1926-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதே கல்லூரி நாளடைவில் வளர்ந்து இலண்டன் ஸ்கூல் ஆஃப் ஹஜின் அண்டு டிராபிக்கல் மெடிசன்ஸ் என்று மாற்றப்பட்டது.

மலேரியா நோயை உலகத்தில் வேரறுத்து, கொசுக்கள் உற்பத்தி இடங்களை அழித்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திட அரும்பாடுபட்ட மருத்துவ விஞ்ஞானி சர்.ரொனால்டு ரோசஸ் 16.10.1932 ஆம் ஆண்டு அன்று காலம் ஆனார்!

டாக்டர் சர்.ரொனால்டு. ரோஸ், தான் இறக்கும் வரை மருத்துவ விஞ்ஞானத்தை ஆராய்ச்சி செய்து, தான் கண்டுபிடித்த மலேரியா கொசுவின் ‘அநோபில்ஸ்’ திட்டம் உலகமெலாம் பரவிட அரும்பாடுபட்ட மருத்துவ ஞானியாகவே வாழ்ந்து மறைந்தார்.