உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

109



‘நோயுள்ள பூச்சிகளிடமிருக்கும் நோய்க் கிருமிகள், நோயில்லாத பூச்சிகளுக்கும் நோயைப் பரப்புகின்றன., நோய் தொற்றுகின்றது’.

நோயில்லாமல் இருந்த பூச்சிகளும் நோய்க்குப் பலியாகின்றன. அதைத் தடுக்க வேண்டுமானால், ஆரோக்கியமாக வாழ்கின்ற பூச்சிகளை நோயுற்றவைகளிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும். என்பதுதான் லூயி பாஸ்டியர் கண்ட சாதனையாகும்.

நோய்க் கிருமிகள் தொற்றும் தன்மை உடையவை, பிறவிடத்தில் நோயைப் பரப்பும் குணமுடையவை என்பதை, முதன் முதலாக அறிவியல் உலகத்திலேயும், அறிஞர் களிடையேயும் கண்டுபிடித்துக் கூறிய முதல் சாதனையாளரே லூயி பாஸ்டியர்தான்.

பாஸ்டியருக்கு முன்பு, எந்த அறிவியல் சாதனையாளரும் பாஸ்டியர் கண்டுபிடித்த நோய்க் கிருமிகள் தன்மையை கண்டுபிடித்துக் கூறியவர்களல்லர் என்பதே உண்மையாகும்.

எனவே, லூயி பாஸ்டியரின் அறிவியல் அறிவுரையின் படி, நோயுள்ள பட்டுப் பூச்சிகள் எவையெவை என்பதைப் பிரித்தெடுக்கப்பட்டன.

நல்ல, வளமுள்ள பட்டுப் பூச்சிகள், வரும் பூச்சி நோயிலே இருந்து காப்பாற்றப்பட்டன. பட்டுத் தொழிற் சாலைகளில் இந்த பாஸ்டியர் முறையைக் கையாண்டார்கள் - பண்ணையாளர்கள்.

அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியரின் ஆய்வுச் சாதனைக் கேற்றவாறு, வியாதியுள்ள பட்டுப் பூச்சிகள் பிரித்து எடுக்கப் பட்டன. நல்ல பட்டுப் பூச்சிகள் நோயிலே இருந்து காப்பாற்றப் பட்டதுடன், ஆரோக்கியமாகவும் அவை பாதுகாக்கப்பட்டன.

பட்டுத் தொழிலாளர்களின் பசி, பட்டினி, வறுமை - சிறுமைகள், துன்பங்கள் - வேதனைகள் எல்லாம் ஒழிந்தன. பட்டுத் தொழில் பிரான்ஸ் நாட்டில் பழைய நிலையிலே ஓங்கி வளர்ந்தது.