உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மருத்துவ விஞ்ஞானிகள்



அன்றாடம் தனது மகனுக்கு என்ன பாடங்களை ஆசான் போதித்தாரோ, அதே பாடத்தை மீண்டும் தனது மகனைப் படிக்க வைத்து அதை அவரும் கேட்டுக் கவனிப்பார்.

ஜோசப் பாஸ்டியரின் இந்தக் கண்காணிப்புக் கல்விப் பணிகள், அவர் தனது மகனைக் கற்றோர் அவையில் முன் நிறுத்தும் சிறப்பை நாளும் வழங்கி வந்து கொண்டிருந்தது. இதனால் லூயிக்கு கல்வியில் பெரும் நாட்டமும், ஊக்கமும் உருவாக்கியது. சிறந்த மாணவராக அவர் விளங்கி வரும் நிலையேற்பட்டது.

லூயி பாஸ்டியர் கல்வியில் சராசரி மாணவராக இருந்தாலும், பார்க்கும் படங்களையெல்லாம் அப்படியே திருப்பி எழுதுவதில் மிகச் சிறந்த ஓவிய ஆற்றல் பெற்றவராகவும் இருந்தார். அவர் படிக்கும் போதே எழுதிய ஓவியங்கள் எல்லாமே பள்ளி ஆசிரியர்களால் பாராட்டப்பட்டன.

ஆனால், தகப்பனார் ஜோசப் பாஸ்டியர் தனது மகன் வரையும் படங்களைத் தனது மனதுக்குள்ளேயே அவரே பாராட்டி மகிழ்ந்து கொள்வாரேயன்றி, தனது மகன் எதிரே யாரிடமும் பாராட்டிப் பேச மாட்டார். காரணம், தனது மகன் கல்வி எந்த வழியிலும் பாழ்பட்டுப் போகக் கூடாது என்ற கவலைதான். அதற்காகவே தினந்தோறும் லூயி பாஸ்டியரின் கல்வியில் அக்கறை காட்டுவார்.

லூயி பாஸ்டியர் பள்ளியின் தலைமை ஆசிரியரான ரொமானெட் என்பவர், ஒவ்வாரு மாணவனையும் அன்றாடம் கவனித்து வருபவர். தனது பள்ளி மாணவர்களிலே யார் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள், யார் சோர்வடைந்துக் குறைவான மதிப்பெண்களைப் பெற்துள்ளார்கள் என்ற மதிப்பெண் பட்டியலைப் பார்த்து, அவிர்வர்களது குறை நிறைகளைக் கூறி ஊக்கமளிக்கும் குணமுடையவர்.

மாணவர்கள் திறமைகளை நன்கு புரிந்து கொண்டு, அவர்களைத் தனது அலுவலக அறைக்குள் அழைத்து, தக்க அறிவுரைகளை வழங்கி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிட