பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

117


ஓய்வு நேர வகுப்பு களையும் நடத்துமாறு மற்ற ஆசிரியர்களுக்கு உத்தர விடுவார்.

ஒரு நாள் லூயி பாஸ்டியரைத் தனது அறைக்கு அழைத்து, அந்த மாணவரிடம் உள்ள நல்ல ஒழுக்கங்களைப் பாராட்டியது டன், அந்த மாணவருடைய ஓவியத் திறமையை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

அவரசப்படாமல், ஆத்திரப்படாமல், மிகப் பொறுமையாக, பாடங்களின் சந்தேகங்களை மீண்டும் மீண்டும் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு, தனது சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும் முறை அந்த தலைமையாசிரியருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு பாடத்தை குறையறத் தெளிவு பெற்ற பின்னரே, மறு பாடத்தைப் படிக்கப் புகும் செயல் அவருக்கு மாணவன்மீது மேலும் அதிகப் பற்றையூட்டியது.

இவற்றையெல்லாம் நன்கு கவனித்த தலைமை ஆசிரியர், லூயி பாஸ்டியரிடம் ஒரு தனித் திறமை, ஏதோ ஓர் உள்ளுணர்வுப் பொறி சுடர்விடுகிறது என்பதை உணர்ந்தார். எதிர்காலத்தில் லூயியிடம் மிகப் பெரிய அறிஞனாக மதிக்கப் படும் அறிவு இருப்பதைக் கண்டார்.

மறுமுறை லூயி பாஸ்டியரைத் தனது அறைக்குள்ளே அழைத்துச் சென்று, தட்டிக் கொடுத்து, ‘லூயி, உன்னிடம் ஏதோ ஒரு திறமையுள்ளது. அதை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, நீ பாரீஸ் நகருக்குச் சென்று, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலே சேருவது நல்லது. அப்போதுதான் எதிர்காலத்தில் நீ அரசு பள்ளி ஆசிரியனாகப் பணியாற்ற முடியும். அதற்கான தகுதிகள் உன்னிடத்தில் உள்ளதாக நான் உணர்கிறேன். உனது தந்தையிடம் இதைக் கூறு’ என்றார்.

தலைமை ஆசிரியரே தனது தகுதியைப் பாராட்டி ஊக்கம் கொடுத்ததை உணர்ந்த லூயி பாஸ்டியர், வீட்டுக்குச் சென்றதும் தனது தந்தையிடம் அதை மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார்.