பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மருத்துவ விஞ்ஞானிகள்



பாரிஸ் புயல் தென்றலானது!
லூயிஸ் அறிவியல் டாக்டரானார்!

‘ஒரு மரம் விளைந்திருக்கிறது, என்று நாம் ஏன் முணு முணுக்க வேண்டும்?:

- நமது தெருக்களிலே வளைந்திருக்கும் மனிதர்களிலே சிலர் காணப்படும் போது!

பிறைச் சந்திரன் ஏன் சாய்ந்திருக்கிறது? என்று நாம் குறை கூற வேண்டும்?

யாராவது வானத்தை எட்டிப்பிடித்து அதை நிமிர்த்த முடியுமா?

நாம் பார்ப்பதில்லையா? சில சேவல்களுக்குத தலையில் கொண்டையிருந்தும், வால்களில் தோகையில்லாமல் இருப்பதை?

சிலவற்றுக்கு காலில் நகம் இருக்கும். கூவும் ஆற்றல் அவற்றுக்கு இருக்காது.

தலையுள்ளவனுக்குத் தலைமீது அணிந்து கொள்ள குல்லாயில்லை

குல்லாயிருப்பவனுக்கோ அதை அணிந்து கொள்ளத் தலையில்லை.’

‘வாழ்க்கை பலவிதம்’ என்ற தலைப்பில் நைஜீரியப் பழங்குடி மக்கள் இடையே பாடப்பட்டு வரும் பாடலிற்கேற்ப, லூயிபாஸ்டர் வாழ்க்கையும் பலவிதமாக அமைந்திருந்தது.

எடுத்துக் காட்டாக, லூயி பாரீஸ் நகர் சென்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்வி பெற! ஆனால், பாசத்தின் இறுக்கம் அவரைப்