புலவர் என்.வி. கலைமணி
131
பாதியில் திரும்ப வைத்து விட்டதைக் கண்ட அவரது பெற்றோர்கள் மனம் வேக்காடனாது.
மகனது பொறுப்பற்ற தன்மைக்காக, பாடுபட்டுத் தேடி ஆசையால் சேர்த்த பணம் வீணாகி விட்டதே என்று அவர்கள் மனம் பொறும்பினார்கள்.
அதே லூயி பாஸ்டியர்ஸ், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பொறுப்புணர்ந்த - கடமையறிந்த மகனாக மாறிய குணத்தைக் கண்டு - அவரது பெற்றோர் குதூகலமடைந்தார்கள்.
மறுபடியும் மகனைப் பாரிஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள் - அதே பெற்றோர்கள். இப்போது, வாழ்க்கையைப் பற்றிய தங்களது அனுபவங்களை விளக்கமாக விளக்கியுரைத்து அதற்கேற்ப படிப்பில் அதிகக் கவனம் செலுத்துமாறு மகனையே அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி, எடுத்த கருமங்கள் ஆகா’ என்ற ஒளவைப் பெருமாட்டி அனுபவ வாழ்க்கை அறிவுரைக்கேற்ப, லூயி தனது பாரிஸ் நகரக் கல்விப் பயணம் மீண்டும் தனக்கு கிடைத்ததை எண்ணி பேருவகை பெற்றார்.
தனது ஆர்பாய் தலைமை ஆசிரியர் ரொமானெட் வாழ்த்துடனும், பெற்றோர்கள், தந்தை ஜோசபைன், மற்ற குடும்பத்தினர்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு லூயி பாரிஸ் நகரம் சென்றார்.
பாரிஸ் சென்ற லூயி, தனது அன்பு ஆசிரியரான பார்பட்டைப் பார்த்தார். அவருடன் பேர்பையரும் வந்திருந்ததைக் கண்ட ஆசிரியர் பார்பட், இரண்டாண்டுகளுக்குப் பிறகு லூயியின் மனமாற்ற உணர்வுகளையும், பேச்சுக்களையும் கண்டு வியந்து, பள்ளியில் சேர்வதற்கான எல்லா உதவிகளையும் செய்தார்.
இந்த முறை லூயிக்கு தனது வீட்டுக் கவனமே எதிரொலிக்கவில்லை. முழுக்க முழுக்க கல்வியிலேயே கவனத்தைச் செலுத்தினார். இப்போது அவருக்கு உண்ண,