பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மருத்துவ விஞ்ஞானிகள்


அவளது காதலன் குடி கொண்டிருக்கும் இதயத்தைச் சுட்டு விடுமாம்! காதலி காதலனிடம் காட்டும் கருணை, அன்பைவிட, அவளது இதயத்தை அவள் எவ்வாறு பாதுகாத்துப் போற்றுகிறாள் பார்த்தீர்களா?

இதன் மூலம் நாம் அறிவது என்ன? அந்தக் காலத்திலேயே, அதற்கும் முன்பான தமிழர் நாகரீக வாழ்க்கையிலேயே, மனதுக்கும் - உணர்வுக்கும் இருப்பிடமாக இதயம் இருந்த அருமையின் பெருமையை அல்லவா சுட்டுகிறார் திருவள்ளுவர் பெருமான்? தமிழர் அக பண்பாட்டை அவர் எவ்வளவு நாகரிகமாக அவனிக்குச் சுட்டிக் காட்டுகிறார் பார்த்தீர்களா?

திருடர்கள் இதயம்!

உடல் இயக்கத்துக்கு மூல காரணம் மூளைதான். என்றாலும், அந்த மூளையின் சிறப்பைக் கண்டறிய முதன் முதல் இரண்டு திருடர்கள்தான் பயன்பட்டிருக்கிறார்கள்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும்-எட்டாம் நூற்றுண்டுக்கும் இடைவெளியில்: எடின்பரோ நகரில் பர்க், ஹாரே என்ற இரண்டு திருடர்கள். தங்களது திருட்டுத் தொழில்களது வருவாய் அவர்கள் வாழ்க்கைக்குப் போதவில்லை என்ற காரணத்தால், அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது! என்ன சிந்தனை அது?

மனிதனுடைய உடலை அறுத்துப் பார்த்துச் சோதனை செய்திட அப்போது அரசு தடை இருந்த காலம். அதனால் மருத்துவ விஞ்ஞானிகளால் உடல் பரிசோதனை ஆராய்ச்சியைச் செய்ய முடியாததால், அந்தத் திருடர்கள் இருவரும்; சுடுகாட்டுக்குச் சென்று, புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, மருத்துவர்கள் சோதனைக்குரிய பிணங்களாகக் கொடுத்து விட்டு - ஏராளமான தொகையைப் பெற்று வாழ்ந்து வந்தார்கள்.

சற்று அதிகமாகக் கூறுவதானால், திருடர்கள் பிணங்களை விற்று வந்தத் தொகையை அக்கால ஏழைகளுக்கு வட்டிக்குக் கொடுப்பார்கள். பணத்தைத் திருப்பித் தரமுடியாத