உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மருத்துவ விஞ்ஞானிகள்



பீர், ஒயின், பால் கெடாமலிருக்க
பாஸ்டியர் முறையே பாதுகாப்பு!

அழுது கொண்ட பிறக்கின்ற குழந்தை ஒரு நாள் சிரித்துக் கொண்டே சாகும் என்பதுதான் மரண சாசனம்

பிறக்கும் சிலர், அந்த நாட்டின் மண்ணிலே பிறந்ததற் காகவும், அந்த மண்ணின் தானிய உணவு வகைகளை உண்ட தற்காகவும், அந்த வான்வெளியின் காற்றை சுவாசித்ததற்காகவும், அந்த பூமியின் ஊற்றுக் கண்களில் சுரந்த நீரைப் பருகிய தற்காகவும், நாளை இதே மண்ணைத் தாங்கிக் கொள்ள மரண மடையப் போகிறோம் என்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஒவ்வோர் சமுதாய அடையாளங்களை நிலைநாட்டினாலும்; இத்தகைய அற்புதப் பிறவிகள் ஒரு சிலர்தான் தோன்றுகிறார்கள். அவர்கள் பிறந்த நாட்டுக்குப் பெருமைத் தேடி தந்து மறைகிறார்கள்.

பிறந்த மண்ணுக்காகத் தொண்டு செய்யும் அவர்களின் லட்சியம் முழுவதும் அவர்கள் ஈடுபட்ட செயற்கரிய செயல்கள் மீதே இருக்கும்.

தங்களது குறிக்கோள்களைக் சீர்குலைக்கும் பட்டங்களையோ, பதவிகளையோ அவர்கள் எதிர்பார்ப்பது இல்லை. ஒரு வேளை அவை, அவர்களைத் தேடி நாடி வந்தாலும் பொருட் படுத்த மாட்டார்கள் - உண்மையான சமுதாயச் சிற்பிகள்.

ஆனால், அந்த பதவிகளும் - பட்டங்களும் என்னென்ன சாதனைகளைச் செய்து வாகை சூடுமோ, அந்தப் பணிகளை, சேவைகளை, தொண்டுகளைச் செம்மையாகச் செய்து முடித்து மண்ணுக்கே மண்ணாகி மறைகின்றார்கள். அத்தகைய மனிதர்களில் ஒருவராக விளங்கியவர் லூயி பாஸ்டியர் என்பவர்.

ஃபிரான்ஸ் நாட்டில் லில் என்பது ஒரு பெரு நகரம். அங்கே மதுபான வகைகளான பீர், ஒயின் ஆகியவைகள் பெருமளவு தயாராவதுண்டு. ஃபிரான்ஸ் நாட்டிலேயே லீல் நகர