பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

149


முதலில் இல்லாமல், திடீரென்றுதான், தாமாகத்தான், உற்பத்தியாகின்றன. காற்றுக்கு - இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உரத்தக்குரலிலே எதிர்வாதம் செய்தார்கள்.

எதிர்வாதமிடும் துறையினர்களுக்கு பதில் கூறும் வகையில், “ஏற்கனவே நுண்ணுயிர்கள் இருந்தவைதான். அவற்றிலிருந்தே புதிய நுண்ணுயிர்கள் உற்பத்தியாகின்றன. அந்த நுண்ணுயிர்கள் காற்றிலேயும் கலந்துவிடுகின்றன. அந்தக் காற்றில் கலந்த நுண்ணுயிர்கள்தான் காற்றின் மூலமே பிற இடங்களுக்குப் பரவுகின்றன” என்பதை மீண்டும் லூயி உறுதியாகக் கூறினார்.

அந்த ஆராய்ச்சியை லூயி, சோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வநதாா.

பல கண்ணாடிக் குழாய்களைத் தயார் செய்தார் லூயி. சில குழாய்களில் நகர் புறம் பக்கமாக வீசும் காற்றை நிரப்பினார். ஆய்வுக் கூடத்திற்கு அவற்றை எடுத்து வந்து சோதனை செய்தார். அந்தக் கண்ணாடிக் குழாய் காற்றிலே ஏராளமான நுண்ணுயிர்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

அடுத்தமுறை, வேறொரு கண்ணாடிக் குழாயை எடுத்துக் கொண்டு கிராமப் புறங்களுக்குச் சென்று, முன்பு போலவே கிராமப்புறக் காற்றை, அந்தக் கண்ணாடிக் குழாயில் நிரப்பிக் கொண்டு சோதனைக் கூடத்துக்கு வந்து சோதனை செய்தார்.

கிராமப் புறக் காற்றில் நகர்ப் புறக் காற்றைவிட நுண்ணுயிர்கள் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். இந்த சோதனை அவரது மனத்துக்கு நிறைவையூட்டியது.

அடுத்த முறையாக, சில கண்ணாடிக் குழாய்களுடன் மலை உச்சிக்கு ஏறிச்சென்றார். மலை ஏறும்போது அவரடைந்த சிரமங்களை அவர் பொருட்படுத்தவில்லை. கருமமே கண்ணாக இருந்த லூயி, மிகக் கஷ்டப்பட்டு மலையேறி அதன் உச்சிக்குச் சென்றடைந்தார்.

மலை உச்சியிலே சில மணி நேரங்கள் தங்கி, பல கண்ணாடிக் குழாய்களில் மலைக் காற்றை நிரப்பி எடுத்துக்